யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
அத்தியாவசியம் என்பதால் அரசுப்பணம் ₹540 கோடி மதிப்பில் பூந்தமல்லியில் நவீன பிலிம் சிட்டி கட்டித்தான் ஆகவேண்டும்.
Twitter Link | Archive Link

Twitter Link | Archive Link
விரிவான விளக்கம்
கடந்த ஜனவரி 06 அன்று சென்னையில் தமிழ் திரைப்பட துறையினர் சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பூந்தமல்லியில், 140 ஏக்கர் பரப்பளவில், ரூ.540 கோடி மதிப்பீட்டில், நவீன திரைப்பட நகரம் (Film City) ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மழையில் நெல் மூட்டைகள் நனைந்து கிடப்பதைப் பாருங்கள். இந்த நேரத்தில் அரசுப்பணம் ₹540 கோடி மதிப்பில் பூந்தமல்லியில் நவீன பிலிம் சிட்டி கட்ட வேண்டியது அத்தியாவசியம் தானா? என குறிப்பிட்டு, விவசாயி ஒருவர் நனைந்த நெல் மூட்டைகளின் மேல் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தப் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது.
மேலும் கடந்த 2019 பிப்ரவரி 18 அன்று பரவி வரும் இதே புகைப்படத்தைக் குறிப்பிட்டு "திடீர் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் - விருத்தாசலத்தில் விவசாயிகள் சோகம்!" என்ற தலைப்பில் விகடனில் கட்டுரை வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

அதில், "விருத்தாசலத்தில் கடலூர் சாலையில் ஒருங்குமுறை விற்பனைக் கூடம் இயங்கி வருகிறது. இங்கு விருத்தாசலம் சுற்றியுள்ள பகுதி இல்லாமல் அருகில் உள்ள அரியலூர், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளும் தங்கள் வயலில் விளையும் நெல், மணிலா, எள் போன்ற விளை பொருள்களை இங்கு எடுத்து வந்து விற்பனை செய்வது வழக்கம். தற்பொழுது கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி அதிக அளவில் நடந்து வருகின்றது. இதன் காரணமாக விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு அதிக அளவில் நெல் மூட்டைகள் வரத்து உள்ளது.
நாள் ஒன்றுக்கு சுமார் 10,000 மூட்டைகள் வரை வரத்து உள்ளது. இந்த நிலையில் இன்று காலையில் விருத்தாசலத்தில் திடீரென கன மழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த கன மழையால் விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்த சுமார் 20,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது." என்று குறிப்பிட்டு பரவி வரும் அந்த புகைப்படத்தைக் குறிப்பிட்டிருந்தனர்.

இதன் மூலம் இந்தப்புகைப்படம் கடந்த 2019-ல் விருத்தாச்சலத்தில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், மழையால் நெல் மூட்டைகள் பாதிப்படைந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது உறுதியாகிறது.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் ரேசன் அரிசி மூட்டையை சாக்கடையில் கொட்டி அள்ளுவதாக பரவும் 2017-ல் வெளியான வீடியோ !
இதற்கு முன்பும் திமுக ஆட்சியில் நெல் மூட்டைகள் சேதமடைவதாகக் கூறி பழைய படங்களை பரப்பப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையம் எனப் பரவும் 9 வருட பழைய புகைப்படம் !
தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவது தொடர்பான தகவலை முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தோம்.
முடிவு:
நம் தேடலில், நெல் மூட்டைகள் மழையில் நனைந்திருக்கையில், ரூ540 கோடி மதிப்பில் பிலிம் சிட்டி அவசியம் தானா? எனக் குறிப்பிட்டு பரப்பப்படும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்பதையும், இது 2019-ல் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பதையும் அறிய முடிகிறது.
இந்நிலையில், மழையில் நெல் மூட்டைகள் நனைந்து கிடப்பதைப் பாருங்கள். இந்த நேரத்தில் அரசுப்பணம் ₹540 கோடி மதிப்பில் பூந்தமல்லியில் நவீன பிலிம் சிட்டி கட்ட வேண்டியது அத்தியாவசியம் தானா? என குறிப்பிட்டு, விவசாயி ஒருவர் நனைந்த நெல் மூட்டைகளின் மேல் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அத்தியாவசியம் என்பதால் அரசுப்பணம் ₹540 கோடி மதிப்பில் பூந்தமல்லியில் நவீன பிலிம் சிட்டி கட்டித்தான் ஆகவேண்டும்.
பொங்கல் நல்வாழ்த்துகள்.
-பிரதி பதிவு pic.twitter.com/YF9EMFT7Vn
— Keeran (@OffKeeran) January 9, 2024
அத்தியாவசியம் என்பதால் அரசுப்பணம் ₹540 கோடி மதிப்பில் பூந்தமல்லியில் நவீன பிலிம் சிட்டி கட்டித்தான் ஆகவேண்டும்.
கொத்தடிமைகளின் உருட்டுகள்...@satyenaiadmk pic.twitter.com/kNgckRwqCk
— சிலம்பம் எஸ்.சூர்யா (@Silambam_SSurya) January 10, 2024