யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘Fly High Institute’ பயிற்சி நிறுவனத்தில், விமான பணிப்பெண் ஒருவர் பயிற்சியில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இது. சித்தரிக்கப்பட்ட இந்த புனைவு வீடியோவை உண்மையான சம்பவம் என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
விமானத்தில் பயணி மற்றும் ஏரோஸ்டர் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாக 1 நிமிடம் 19 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மேலும் அந்த பயணி, சக பயணியிடம் சத்தமாக பேசிக்கொண்டிருப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
ஏய்! நான் யார் தெரியுமா !
எங்க அப்பாதான் இந்திய ????? pic.twitter.com/fXFIVm3Phs
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது fly high institute nagpur என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ நவம்பர் 11 அன்று பதிவிடப்பட்டிருந்ததை காணமுடிந்தது. அதில் ஒரு சிறிய தருணம், அப்போது கிடைக்காத முந்திரி பருப்பு மற்றும் அந்த நேரத்தில் கிடைக்காத போஹாவை கோரியபோது ஒரு பெரிய காட்சியாக மாறியது. குழப்பம் இருந்தபோதிலும், எங்கள் மூத்த குழுவினர் உள்ளே நுழைந்து சூழ்நிலையைக் கையாண்டு விமானத்தில் அமைதியை உறுதி செய்தினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இந்த வீடியோவில் இன்ஸ்டாகிராம் பிரபலம் suraj_shelke15 பக்கமும் டேக் செய்யப்பட்டிருந்தது. எனவே இது ஒரு பயிற்சி வீடியோ என்பதை அறியமுடிந்தது.
இதையடுத்து fly high institute nagpur இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்த போது, விமானத்திற்குள் நடக்கும் போலி சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களைக் காட்டும் பல வீடியோக்களைக் கண்டோம்.
இந்த வீடியோக்கள் குறித்து ஆய்வு செய்த போது, பரவி வரும் வீடியோவில் இருப்பவர்கள், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள ‘Fly High Institute‘ என்னும் பயிற்சி மையத்தை சார்ந்தவர்கள் என்பதும், விமானத்தில் பணிபுரிபவர்கள் பணி நேரத்தில் எவ்வாறு பல்வேறு சூழல்களை கையாள வேண்டும் என்று பயிற்சியளித்த போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் தெரியவந்தது.
முடிவு:
எனவே, ‘Fly High Institute’ பயிற்சி நிறுவனத்தில், விமான பணிப்பெண் ஒருவர் பயிற்சியில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இது. சித்தரிக்கப்பட்ட இந்த புனைவு வீடியோவை உண்மையான சம்பவம் என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
