YouTurn

செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவிக்கவில்லை என பொய் செய்தி பரப்பும் பெலிக்ஸ்!

செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவிக்கவில்லை என பொய் செய்தி பரப்பும் பெலிக்ஸ்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே குவாரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது குவாரியை சேர்ந்த ஐம்பத்துக்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்து, தனது எக்ஸ் பக்கத்தில் ஜனவரி 30 அன்றே பதிவு செய்துள்ளது.

பரவிய செய்தி

செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவிக்கவில்லை - பெலிக்ஸ்

image.png

Youtube Link 

விரிவான விளக்கம்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரியில், சமீபத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் டிவி செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் உள்ளிட்ட 5 பேர் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். 

இந்நிலையில் Inclusive News Tamil ஊடகத்தில் தவெக உறுப்பினரும், ஊடகவியலாளருமான ஃபெலிக்ஸ் ஜெரால்ட் நேர்காணால் ஒன்றை அளித்திருந்தார். அதில் கரூரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கூறியிருந்தார். 


உண்மை என்ன? 

ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தெரிவித்த இந்த கருத்து குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் எக்ஸ் பக்கத்தில் ஜனவரி 30, 2026 அன்று பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. அதில் ”கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே குவாரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது குவாரியை சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்கிய குண்டர்களை உடனே கைது செய்ய வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறோம்” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. 


இது குறித்து மேலும் தேடிய போது, One India Tamil ஊடகத்தில், "அண்ணே, உங்களை தெரியும்…கரூரில் கதறிய செய்தியாளர்! திமுக பழனியாண்டிக்கு சிக்கல்? சீறும் கிருஷ்ணசாமி” என்ற தலைப்பில் பிப்ரவரி 02 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் கரூர் குவாரியில் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறனர் என்றும், திருச்சி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


முடிவு: 

எனவே, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே குவாரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவிக்கவில்லை என பெலிக்ஸ் பொய் செய்தி பரப்பி வருகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க