YouTurn

’ஆற்றல் இல்லாமல் 24 மணிநேரமும் சுற்றும் விசிறி’ என்று பரப்பப்படும் போலி அறிவியல் கருத்து!

’ஆற்றல் இல்லாமல் 24 மணிநேரமும் சுற்றும் விசிறி’ என்று பரப்பப்படும் போலி அறிவியல் கருத்து!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

எந்தவொரு ஆற்றலும் இல்லாமல் இவ்வாறாக மின்சாரம் உருவாக்கலாம் என்பது அறிவியலுக்கு புறம்பான கருத்தாகும்.

பரவிய செய்தி

Free Energy! முக்கோண வடிவத்தில் ரப்பர் பேண்டுகளை இணைத்து விசிறியை நாள் முழுவதும் சுற்ற வைக்கலாம். 


image.png


 Facebook Link

விரிவான விளக்கம்

முக்கோண வடிவத்தில் ஆணியில் ரப்பர் பேண்டுகளை இணைத்து, அதை விசிறியுடன் இணைத்து, இந்த ரப்பர் பேண்டுகளின் Elastic தன்மையால் 24 மணிநேரமும் விசிறியை சுற்ற வைக்கலாம். இந்தவகையில் எவ்விதமான ஆற்றல் உள்ளீடுகளும் இல்லாமல் விசிறியை நாள் முழுவதும் சுற்ற வைக்கலாம் என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன?


அறிவியல் கோட்பாட்டின் படி, ஆற்றலை (Energy) உருவாக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. ஒரு வகையான ஆற்றல் மற்றொரு வகையான ஆற்றலாக மாற்றப்பட முடியும். இந்த அடிப்படையில் தான் அனல்மின் நிலையத்தில் வெப்ப ஆற்றல் (Heat Energy) மின்சாரமாக (Electric Energy) மாற்றப்படுகிறது. அதேபோல் அணுமின் நிலையத்தில் அணு ஆற்றல் (Nuclear Energy) மின்சாரமாக மாற்றப்படுகிறது.


image.png


இந்த வீடியோவில் ரப்பர் பேண்டுகளின் Elastic விசையின் மூலம் இந்த விசிறி முடிவில்லாமல் சுற்றவதாக காட்டப்படுகிறது. இதுபோன்ற எவ்விதமான ஆற்றல் உள்ளீடுகளும் இல்லாமல் முடிவில்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கும் இயந்திர வடிவமைபிற்கு ’Perpetual Motion Machine’ என்று பெயர். 



ஆனால் இது போன்ற இயந்திரங்கள் இயங்கமுடியாது. ஏனெனில், ஒரு இயக்கம் குறிப்பிட்ட அளவு ஆற்றலைக் கொண்டு நிகழ்த்தப்படும் போது, அது அந்த ஆற்றல் நீடிக்கும் வரை இயக்கத்தில் இருக்கும். ஆற்றல் தீர்ந்தவுடன் இயக்கம் நின்று விடும். ஆற்றலே இல்லாத இயக்கம் என்பது அறிவியலுக்கு புறம்பானது. 


இந்த வீடியோவில் ரப்பர் பேண்டுகளில் செலுத்தப்படும் விசை என்பது மனிதனால் செலுத்தப்படும் இயந்திரவியல் ஆற்றலாகும் (Mechanical Energy). அது நீண்ட நேரம் நீடிக்க முடியாது. மேலும், ரப்பர் பேண்டுகளின் ’Elasticity’ என்பது அதன் பண்பு மட்டும் தான். அதுவொரு உள்ளார்ந்த ஆற்றல் இல்லை. அதனால் தன்னிச்சையாக தொடர்ந்து இயங்கமுடியாது. 


மேலும் இந்த வீடியோவில் விசிறி இரண்டு பக்கமும் மாறி மாறி சுற்றுவது தெளிவாகத் தெரிகிறது. இதுபோன்ற Free Energy என்ற பெயரில் நிறைய மோசடியான கண்டுபிடிப்புகள் பரப்பப்படுவது பற்றி MR.GK என்னும் அறிவியல் யூட்யூப்பர் ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளார்.


முடிவு:


எந்தவொரு ஆற்றலும் இல்லாமல் விசிறியை நாள் முழுவதும் சுற்ற வைக்கலாம், மின்சாரம் தயாரிக்கலாம் என்பதெல்லாம் அறிவியலுக்கு புறம்பான கருத்தாகும். இதுபோன்ற ’போலி அறிவியல் (Pseudo Science)’ கருத்துகளை பரப்பும் பல வீடியோக்கள் இணையத்தில் நிறைய இருக்கிறது. இவற்றை நம்ப வேண்டாம்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க