YouTurn

முதல்வர் ஸ்டாலின் புறாக்கறி உண்ணதாக பரவி செய்தி! உண்மை என்ன?

முதல்வர் ஸ்டாலின் புறாக்கறி உண்ணதாக பரவி செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

நரிக்குறவர்கள் குடியிருப்புக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு தேநீரும், இட்லியும் நாட்டுக்கோழி குழம்பும் விருந்தளிக்கப்பட்டது. இதனை திரித்து புறாக்கறி கொடுக்கப்பட்டதாகவும் அதனை ஸ்டாலின் புறக்கணித்ததாகவும் தவறாக பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

புறா கறிய திண்ணதுல இருந்து சுடலை யார் வீட்டுக்கும் போறதில்ல 

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

நரிக்குறவர் வீட்டில் முதல்வர் ஸ்டாலின் உணவு உண்ணும் போது, அவர் சாப்பிடுவது புறாக்கறி என்று சொன்னவுடன், அவர் எழுந்து சென்று அதனை புறக்கணித்ததாக செய்தி ஒன்றை பரப்பி வருகின்றனர். 


உண்மை என்ன? 

முதலமைச்சர் புறாக் கறி சாப்பிட்டாரா என்பது குறித்து தேடி பார்த்தோம். அப்போது இது குறித்து ஏப்ரல் 15, 2022 அன்று ”ஆவடி நரிக்குறவர் குடியிருப்பில் தேநீர், இட்லி நாட்டுக்கோழி குழம்பு சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்” என்ற தலைப்பில் இந்து தமிழ் ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் ”திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள நரிக்குறவர்கள் குடியிருப்புக்குச் சென்று நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர், குமார் என்பவர் வீட்டில் தயாரிக்கப்பட்ட தேநீர் வழங்கப்பட்டது. மேலும், முதல்வருக்கு ஏற்கெனவே கொடுத்திருந்த வாக்குறுதியின்படி நாட்டுக்கோழி குழம்பும் இட்லியும் சமைத்து வைத்திருப்பதாகவும், அதனை முதல்வர் சாப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை ஏற்று முதல்வர் ஸ்டாலின் அங்கு சாப்பிட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


அதே போல் நீர்த்திரை ஊடகப் பக்கத்தில், ”நரிக்குறவர் வீட்டில் முதல்வருக்கு கறி விருந்து” என்ற தலைப்பில் முதலமைச்சர் அங்கு சென்ற வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. 4:32 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில், முதல்வர் ஸ்டாலின் நரிக்குறிவர்கள் வீட்டிற்கு சென்றது முதல், உணவருந்தியது வரை அனைத்தும் பதிவாகியிருந்தது. அதில் புறாக் கறி சாப்பிட்டதிற்கான எந்த பதிவும் இல்லை. மேலும் அந்த வீடியோவின் இறுதியில், அங்கிருக்கும் பெண்மணி புறாக்கறி என்று கூறியிருப்பார். இதனை திரித்து புறாக்கறி கொடுக்கப்பட்டதாகவும் அதனை ஸ்டாலின் புறக்கணித்ததாகவும் தவறாக பரப்பப்படுகிறது. 


மேலும் APB NADU, JAYA PLUS போன்ற ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


முடிவு : 

நம் தேடலில்,  நரிக்குறவர்கள் குடியிருப்புக்குச்  சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு தேநீரும்,  இட்லியும் நாட்டுக்கோழி குழம்பும் விருந்தளிக்கப்பட்டது. மேலும் அங்கிருக்கும் பெண்மணி புறாக்கறி என்று மட்டுமே கூறியிருப்பார். இதனை திரித்து புறாக்கறி கொடுக்கப்பட்டதாகவும் அதனை ஸ்டாலின் புறக்கணித்ததாகவும் தவறாக பரப்பப்படுகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க