YouTurn

தூத்துக்குடியில் பசுமைவெளி கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டம் தவெக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதா?

தூத்துக்குடியில் பசுமைவெளி கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டம் தவெக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2025 டிசம்பர் மாதமே தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க ஹூண்டாய் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது.

பரவிய செய்தி

இப்படி சத்தமே இல்லாம வேலைய மட்டும் செஞ்சிட்டு போயிட்டே இருக்கணும்! 

Well done @Keerthana4VNR 


image.png


X Link / Archive Link


விரிவான விளக்கம்

சமீபத்தில் தமிழ்நாட்டின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, தென் கொரியாவின் உல்சான் நகரத்திற்குச் சென்று அந்நகரத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார். தூத்துக்குடியில் பசுமைவெளி கப்பல் கட்டும் தளத்தை அமைக்க ஹூண்டாய் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதால், அமைச்சர் கீர்த்தனா தென் கொரியா சென்று அந்நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார்.


இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் அமைச்சர் கீர்த்தனா இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு,  ’ஹூண்டாய் நிறுவனம் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் இந்த திட்டம் தவெக அரசால் கொண்டுவரப்பட்டதாக’ தவெக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன?


தூத்துக்குடியில் ஹூண்டாய் நிறுவனம் பசுமைவெளி கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்தது குறித்த செய்திகளைத் தேடினோம்.


image.png


2025 டிசம்பர் மாதம் ‘The Hindu’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தி ஒன்றில், ‘2025 டிசம்பர் 7ஆம் தேதியன்று மதுரையில் நடந்த ‘T.N. Rising Summit’ என்னும் முதலீட்டாளர்கள் கூட்டத்தில், தூத்துக்குடியில் ஹூண்டாய் நிறுவனம் கப்பல் கட்டும் தளம் அமைப்பது பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.



அதேபோல் ’WION’ என்ற செய்தித்தளத்தில் 2025 டிசம்பர் 8ஆம் தேதியன்று வெளியாகியுள்ள செய்தியில், ‘ஒன்றிய அரசு கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை முன்மொழிந்ததாகவும், அதில் ஹூண்டாய் நிறுவனம் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழ்நாட்டின் தூத்துக்குடியை தேர்ந்தெடுத்ததாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. தென் கொரியாவின் உல்சான் நகரத்தை போலவே தூத்துக்குடியில் வெயில் மற்றும் மழைப்பொழிவு இருப்பதால், தூத்துக்குடி ஏற்ற இடமாக இருக்குமென்று ஹூண்டாய் நிறுவனம் தீர்மானித்தாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, தூத்துக்குடியில் ஹூண்டாய் நிறுவனம் கப்பல் கட்டும் தளம் அமைக்க ஒப்பந்தம் செய்தது 2025 டிசம்பர் மாதம் என்பதும் அப்போது திமுக ஆட்சியில் இருந்தது என்பதும் தெளிவாகிறது. 


முடிவு:


திமுக ஆட்சியில் 2025 டிசம்பர் மாதமே ஹூண்டாய் நிறுவனம் தூத்துக்குடியில்  கப்பல் கட்டும் தளம் அமைப்பது குறித்து ஒப்பந்தம் செய்துள்ளதை மறைத்து, இந்த திட்டம் தவெக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக தவெக ஆதரவாளர்கள் தவறாக பரப்புகிறார்கள்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க