YouTurn

திமுக ஆட்சியில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் (GER) குறைந்துள்ளதா? உண்மை என்ன?

திமுக ஆட்சியில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் (GER) குறைந்துள்ளதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2018-19 கல்வியாண்டில் GER 47-ஆக இருந்தது. 2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் 2021-22 கல்வியாண்டில் இது 47-ஆக இருக்கிறது.

பரவிய செய்தி

’2018ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் விகிதம் (Gross Enrolment Ratio) 54 சதவீதமாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் இப்போது 49 சதவீதமாக குறைந்துள்ளது’ - பொன் வில்சன் 


 YouTube Link

விரிவான விளக்கம்

சமீபத்தில் ’பேசு தமிழா பேசு’ யூட்யூப் தளத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அரசியல் விமர்சகர் பொன் வில்சன் என்பவர், ‘அதிமுக ஆட்சியிலிருந்த போது 2018ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio) 54 சதவீதமாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் இப்போது 49 சதவீதமாக குறைந்துவிட்டது’ என்று பேசினார்.



உண்மை என்ன?


தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் (GER) பற்றிய அதிகாரப்பூர்வ தரவுகளை இணையத்தில் தேடினோம். 


ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உயர்கல்வித் துறை, 2021-22 கல்வியாண்டில் இந்திய முழுவதும் உயர்கல்வியின் நிலை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பதைக் காணமுடிந்தது. அதில், 2017-18 முதல் 2021-22 வரையிலான ஐந்து கல்வியாண்டுகளில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் (GER) பற்றிய மாநில வாரியான தரவுகளை காணமுடிந்தது. 



அதன்படி, 2017-18 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 46.9-ஆக இருந்தது. 2018-19 கல்வியாண்டில் 47-ஆக இருந்தது. 2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் 2021-22 கல்வியாண்டில் இது 47-ஆக இருக்கிறது.


இதிலிருந்து, 2018ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 54 சதவீதமாக இருந்தது என்று கூறிவது பொய்யான தகவல் என்பது நிரூபணமாகிறது.


முடிவு:


2018-19 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 47-ஆகவே இருந்தது. இதனை மறைத்து, 54 சதவீதமாக இருந்ததாக பொன் வில்சன் பொய்யான தகவலை பரப்புகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க