YouTurn

மீண்டும் அம்மா உணவகம் திட்டத்தைக் கொண்டு வந்தாரா முதல்வர் விஜய்?

மீண்டும் அம்மா உணவகம் திட்டத்தைக் கொண்டு வந்தாரா முதல்வர் விஜய்?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் திட்டம் எப்போதும் நிறுத்தப்படவே இல்லை.

பரவிய செய்தி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வால் கொண்டு வரப்பட்ட ‘அம்மா உணவகம்’ திட்டத்தை முதல்வர் விஜய் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார். 


விரிவான விளக்கம்

கடந்த 2011 முதல் 2016 வரையில் அதிமுக ஆட்சியில் இருந்த போது ஜெயலலிதா-வால் ‘அம்மா உணவகம்’ திட்டம் கொண்டு வரப்பட்டது. நகர்புறங்களில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், கலவை சாதங்கள் 5 ரூபாய்-க்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை தற்போது முதல்வராக இருக்கும் விஜய் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?


’அம்மா உணவகம்’ குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். ’தினத்தந்தி’ செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றின் படி, ‘அம்மா உணவகம்’ என்ற திட்டம் 2013 அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்பட்டது. மேலும், 2016 வரையிலான அதிமுக ஆட்சியில் சென்னையில் மட்டும் 407 ‘அம்மா உணவகங்கள்’ செயல்பட்டு வந்தன. 


image.png


2025 செப்டம்பர் மாதம் ’மாலை மலர்’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியின் படி, சென்னையில் 383 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, பழைய கட்டிடங்களில் செயல்பட்டு வந்த சில அம்மா உணவகங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக திமுக ஆட்சியில் மூடப்பட்டதாக ‘DT Next’ செய்தித்தளத்தின் செய்தியைக் கொண்டு அறிய முடிகிறது. இதனால் தான் அம்மா உணவகங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 



அதேநேரத்தில், திமுக ஆட்சிக்காலத்தில் சென்னையில் உள்ள 291 அம்மா உணவகங்களில் மேம்பாட்டு பணிகளுக்காக  மாநகராட்சி சார்பில் 18.61  கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதனைக் கொண்டு சமையலுக்கு தேவையான பாத்திரங்கள், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட உபகரணங்களும் வாங்கப்பட்டன. 



மேலும், தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், கடந்த மே 18ஆம் தேதியன்று வெளியான செய்தியின் படி, ’அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும் முதல்வர் விஜய் ஆணையிட்டுள்ளதாக’ தெரிய வருகிறது. மேலும் இதற்கான செலவினங்களை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுக்கிறது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் திட்டம் எப்போதும் நிறுத்தப்படவே இல்லை என்பது தெரிகிறது. நிறுத்தப்படாமல் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்ததாக சொல்லப்படுவது தவறான தகவலாகும். 


முடிவு:


தொடங்கியதிலிருந்து நிறுத்தப்படாமல் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் ’அம்மா உணவகம்’ திட்டத்தை விஜய் முதல்வரான பின்னர் மீண்டும் கொண்டு வந்ததாக தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க