யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு பெண் தனது கணவரை செருப்பால் அடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவாகும்.
பரவிய செய்தி
உத்திர பிரதேசத்தில் பைக் சவாரியில் செல்லும் போது பாலியல் சீண்டல் கொடுத்த சொறி நாயை செருப்பால் அடித்த சிங்க பெண்! இவர்களுகா உங்கள் ஓட்டு?

விரிவான விளக்கம்
உத்திர பிரதேச மாநிலத்தில் பைக் டாக்ஸில் செல்லும் போது, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை ஒரு பெண் செருப்பால் அடிப்பதாக 21 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உத்திர பிரதேசத்தில் பைக் சவாரியில் செல்லும் போது பாலியல் சீண்டல் கொடுத்த சொறி நாயை செருப்பால் அடித்த சிங்க பெண்!
இவர்களுகா உங்கள் ஓட்டு?🫤🫤#UP #Modi #Yogi pic.twitter.com/9LeAIb18aB
உண்மை என்ன?
பரவி வரும் காணொளியைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது இந்தியா டூடே ஊடகம் ”Viral video shows woman hitting husband with slipper on moving bike” என்ற தலைப்பில் மே 21 அன்று வெளியான செய்தி ஒன்றைப் பார்க்கமுடிந்தது. அதில் ஒரு பெண் தனது கணவரைச் செருப்பால் அடிக்கும் காணொளி வைரலாகி வருவதாகவும், இதனால் சாலை பாதுகாப்பு குறித்த கவலை எழுவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

மேலும் இது குறித்துத் தேடிப் பார்த்த போது, அதே தேதியில் NEWS 18 வெளியிட்ட செய்தி ஒன்றைப் பார்க்க முடிந்தது. அதில் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, ஒரு மனைவி தனது கணவரைப் பலமுறை தாக்குவதாகவும், இந்த காட்சி தம்பதியினரின் பின்னால் பயணித்த ஒருவரால் பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.

அதே போல் Times Now ஊடகத்தில் வெளியான செய்தியில், அந்தப் பெண்ணின் வன்முறையைத் தூண்டியது எது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும், அதேசமயம் டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்தால் அந்த பதிவின் சரியான தேதி, இடம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தது.

அதே போல் India TV, News24, Indiaherald போன்ற ஊடகங்களிலும், இது குறித்தான செய்தி வெளியாகியிருந்ததைக் காணமுடிந்தது.

முடிவு :
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு பெண் தனது கணவரைச் செருப்பால் அடிக்கும் போது எடுக்கப்பட்ட காணொளியாகும். இதை பைக் சவாரியில் செல்லும் போது பாலியல் சீண்டல் என்று தவறாகப் பரப்புகின்றனர்.