YouTurn

சென்னை Air Show-வில் இறந்தவர்களுக்கு நிவாரணம் இன்னும் கொடுக்கப்படவில்லையா? உண்மை என்ன?

சென்னை Air Show-வில் இறந்தவர்களுக்கு நிவாரணம் இன்னும் கொடுக்கப்படவில்லையா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் (Air Show) இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது

பரவிய செய்தி

’முதல்வரும் துணை முதல்வரும் கலந்துகொண்ட சென்னை ஏர்ஷோவில் (Air Show) ஐந்து பேர் இறந்து போனார்கள். அந்த குடும்பத்திற்கு இன்னும் நிவாரண நிதி கொடுக்கப்படவில்லை’ - ராவ்தர் இப்ராகிம், தவெக


YouTube Link

விரிவான விளக்கம்

2024 அக்டோபர் 6ஆம் தேதியன்று சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் 92ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டவர்களில் 5 பேர் இறந்தனர். 300க்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 


இந்நிலையில் சமீபத்தில் ‘Citi Fox Media’ என்ற யூட்யூப் தளத்தில் நேர்காணலில் கலந்து தவெக கட்சியைச் சேர்ந்த ராவ்தர் இப்ராகிம், ’இந்த சென்னை விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்து இறந்து போன 5 பேருக்கு இன்னும் நிவாரண நிதி வழங்கப்படவில்லை’ என்று பேசினார்.



உண்மை என்ன?


சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் இறந்து போனவர்களுக்கு நிவாரண நிதி ஏதும் கொடுக்கப்பட்டுள்ளதா என்று செய்திகளில் தேடினோம்.


image.png


‘The Hindu’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியின் படி, இந்த விமான சாகச நிகழ்ச்சி நடந்த மறுநாளே, ‘இறந்த ஐந்து பேரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரித்ததோடு, அவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணத் தொகை கொடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக தெரிகிறது.


image.png


இதேபோல், ‘இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியைக் காணமுடிகிறது. ‘இந்த விமான சாகச நிகழ்ச்சியில் கடும் வெயில் மற்றும் பிற மருத்துவ காரணங்களால் 5 பேர் இறந்து போனதற்கு  மன வேதனை அடைந்தேன். அவர்களது குடும்பங்களுக்கு இரங்கல்  தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவர்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று ஸ்டாலின் தெரிவித்தாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதிலிருந்து சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.


முடிவு:


சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் இறந்து போன ஐந்து பேரின் குடும்பத்திற்கு இன்னும் நிவாரண நிதி கொடுக்கப்படவில்லை என்று தவெகவைச் சேர்ந்த ராவ்தர் இப்ராகிம் தவறான தகவலை பரப்பி வருகிறார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க