YouTurn

முட்புதரில் தாய் வீசி விட்டுச் சென்ற குழந்தை எனப் பரவும் தவறான வீடியோ!

முட்புதரில் தாய் வீசி விட்டுச் சென்ற குழந்தை எனப் பரவும் தவறான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோவில் இருப்பது நீத்து- ஆகாஷ் என்பவர்களின் குழந்தை. அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த வீடியோவை, பலரும் முட்புதரில் வீசப்பட்ட குழந்தை என்று கூறி சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

முட்புதரில் தாய் வீசி விட்டுச் சென்ற அழகுச் செல்லம்

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

குழந்தையை முட்புதரில் தாய் வீசி விட்டுச் சென்றதாக கூறி 35 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது ihaan_aizel என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் "Ei... No ball damage at all" என்ற தலைப்பில் ஏப்ரல் 26ஆம் தேதி பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


இதையடுத்து அந்த பக்கத்தில் பரவி வரும் வீடியோவில் உள்ள குழந்தையின், பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. 

image.png


அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் BIOவில், இந்த பக்கத்தை நீத்து என்பவரால் கையாளப்படுவதாகவும், அகாஷ் என்ற பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து தேடிய போது, பரவி வரும் வீடியோவில் இருப்பது நீத்து- ஆகாஷ் என்ற தம்பதிகளின் குழந்தை என்பது தெரியவந்தது. 

image.png

முடிவு:

நம் ஆய்வில், பரவி வரும் வீடியோவில் இருப்பது நீத்து- ஆகாஷ் என்பவர்களின் குழந்தை. அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த வீடியோவை, பலரும் முட்புதரில் வீசப்பட்ட குழந்தை என்று கூறி சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருவது தெரியவந்தது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க