யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்’ தெலுங்கு கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
’தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தெலுங்கு மொழி: தமிழக அரசுக்கு தெலுங்கு சம்மேளனம் பாராட்டு’ என்று தலைப்பிட்ட செய்தியை பதிவிட்டு, தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தமிழ் வளர்ச்சிக்கான நிறுவப்பட்ட தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தெலுங்கு மொழியை பயிற்றுவிக்கும் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருவதாக சமூக வலைத்தளத்தில் பரப்புகிறார்கள்.
தமிழர்கள் வரி பணத்தில் தெலுங்கு மொழி வளர்க்கும் திராவிட மாடல் 💦💦 pic.twitter.com/Amj9AMR8g5
உண்மை என்ன?
’தமிழாராய்ச்சி நிறுவனத்தில்’ தெலுங்கு கற்பிக்கப்படுவது குறித்து இணையத்தில் தேடிய போது, ’தினமணி’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் சென்னையில் உள்ள ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்’ ஹிந்தியை விருப்பப் பாடமாகக் கற்பிக்கும் திட்டத்தை அப்போது தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். இதற்காக 6 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கியது அப்போதைய அதிமுக அரசு.
இந்த முயற்சிக்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்பால் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்’ ஹிந்தியை விருப்பப் பாடமாகக் கற்பிக்கும் திட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தது அதிமுக அரசு. மேலும், ஹிந்திக்கு பதிலாக தெலுங்கு கற்பிக்கப்படும் என்றும் அதற்காக ரூ.3 லட்சம் ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்’ தெலுங்கு கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
முடிவு:
‘தமிழாராய்ச்சி நிறுவனத்தில்’ தெலுங்கு கற்பிக்கும் திட்டம் அதிமுக அரசால் தொடங்கப்பட்டது. இதனை மறைத்து திமுக தான் இந்த திட்டத்தை தொடங்கியதாக சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்புகிறார்கள்.
