YouTurn

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் என்று பரவும் தவறானப் புகைப்படம்!

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் என்று பரவும் தவறானப் புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

​​அப்துல் கலாமின் மூத்த சகோதரர் தனது வயது முதிர்வு காரணமாக கடந்த 2021 மார்ச் 07 அன்று, தன்னுடைய 104வது வயதில் காலமானார். மேலும் பரவி வரும் புகைப்படத்திற்கும், அப்துல் கலாமின் மூத்த சகோதரருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

பரவிய செய்தி

Mind = Blown! Did you know this? 

image.png

Instagram Link | Archived Link

விரிவான விளக்கம்

பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர் தான் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயர் என்றும், 104 வயதாகும் அவர், இன்னும் குடை பழுதுபார்த்து தனது வருமானத்தை ஈட்டி வருவதாகவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த புகைப்படம் குறித்து தேடி பார்த்தோம். அப்போது முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, ஜூலை 27, 2015 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். 2015 முதலே இந்த புகைப்படம் அப்துல் கலாமின் சகோதரர் என்று பல்வேறு சமூகவலைதளப்பக்கத்தில் பரவி வந்ததை பார்க்கமுடிந்தது. 


இதையடுத்து அப்துல் கலாமின் சகோதரரின் தொழிலை குறித்து தேடி பார்த்தோம். அப்போது apj abdul kalam foundation-ன் இணையதளப்பக்கத்தில், முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயர் குறித்து சில தகவல்கள் கிடைத்தன. அவர் apj abdul kalam foundation-ன் முன்னாள் தலைவராகவும், அறங்காவலர்களில் ஒருவராக இருந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த இணையதளப்பக்கத்தில் உள்ள புகைப்படத்திற்கும், பரவி வரும் புகைப்படத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்பதையும் பார்க்கமுடிந்தது. 

image.png


மேலும் இதை உறுதி செய்ய, அப்துல் கலாமின் சகோதரர் குறித்து ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்பது குறித்து தேடி பார்த்தோம்.அப்போது மார்ச் 07, 2021 அன்று Hindustan Times, The Hindu போன்ற ஊடகப் பக்கங்களில், வயது முதிர்வு காரணமாக அப்துல் கலாமின் சகோதரர் முகமது முத்து மீரான் 104 வயதில் காலமானார் என்று செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.

image.png



முடிவு:

நம் தேடலில், அப்துல் கலாமின் மூத்த சகோதரர் என்றும், குடை பழுதுபார்க்கும் கடையில் இன்னும் வேலை செய்து வருகிறார் என்றும் பரவி வரும் பதிவு தவறானது என்பது தெரியவந்தது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க