YouTurn

கணிசமான புதிய வாக்காளர்கள் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிறார்களா? ’NDTV தமிழ்’ கருத்து கணிப்பு?

கணிசமான புதிய வாக்காளர்கள் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிறார்களா? ’NDTV தமிழ்’ கருத்து கணிப்பு?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

’NDTV தமிழ்’ தளம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பாடாமல் இருக்கிறது. இதுபோன்ற கருத்து கணிப்பு NDTV செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.

பரவிய செய்தி

’NDTV தமிழ்’ சேனல் நடத்திய கருத்துக் கணிப்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்நாட்டின் புதிய வாக்காளர்கள் மத்தியில் அதிக அளவில் ஆதரவு இருப்பதாக தெரிவித்துக்கிறார்கள்.


image.png


Instagram Link


image.png


Facebook Link

விரிவான விளக்கம்

வருகின்றன ஏப்ரல் மாதம் 23ஆம் தேதியன்று தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் ’NDTV தமிழ்’ சேனல் கடந்த பிப்ரவரி மாதம் 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய வாக்காளர்கள் மத்தியில் எந்த கட்சிகளுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறது என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தியதாகவும், அதில் புதிய வாக்காளர்களில் 47 சதவீதம் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 




உண்மை என்ன?


முதலில், தமிழ்நாட்டில் புதிய வாக்காளர்கள் மத்தியில் ஏதேனும் கருத்து கணிப்பினை ’NDTV தமிழ்’ ஊடகம் நடத்திருக்கிறதா? என்று தேடினோம். ’NDTV தமிழ்’ இது போன்று கருத்து கணிப்பு நடத்தியதாக எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை என்பதைக் காண்கிறோம்.



மேலும், ’NDTV தமிழ்’ என்ற பெயரில் யூட்யூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள கணக்குகள் இருப்பதைக் காணமுடிந்தது. இது ’NDTV’ செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கங்கள் தான் எனினும், இவற்றில் கடந்த 5 ஆண்டுகளாக எந்த செய்திகளும் பதிவிடப்படவில்லை என்பதைக் காணமுடிகிறது. 


image.png


’NDTV தமிழ்’ யூட்யூப் பக்கத்தில் கடைசியாக 2020 ஜூன் மாதம் வீடியோ பதிவிடப்பட்டிருக்கிறது. அதேபோல், ‘NDTV தமிழ்’ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2020 செப்டம்பர் மாதம் செய்தி பதிவிடப்பட்டுள்ளது. 


இதிலிருந்து, ‘NDTV தமிழ்’ என்ற சேனல் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. அது இதுபோன்றதொரு கருத்துக் கணிப்பை நடத்தவே இல்லை என்பது தெரிய வருகிறது.


முடிவு:


5 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் ஒரு சேனல் தேர்தல் கருத்து கணிப்பு நடத்தியதாகவும், அதில் புதிய வாக்காளர்கள் நாம் தமிழர் கட்சியைத் தான் அதிகமாக ஆதரிப்பதாகவும் பொய்யை பரப்பி வருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க