யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் ஜெட் விமானங்களை தாக்கியதாகக் கூறி இரண்டு வெவ்வேறு செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
பரவிய செய்தி
பரவிய செய்தி 1: பிரான்ஸ் தயாரிப்பு இந்தியாவுக்கு கொள்வனைவு செய்த பல கோடி பெறுமதியான ரபேல் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. இப்போ கட்டி இழுக்கபடும் விமானம்.. இது குறித்து உங்கள் கருத்து என்ன ?
பரவிய செய்தி 2:
பாகிஸ்தான் விமானப்படைக்கும் இந்திய விமானப்படைக்கும் இடையிலான சண்டையில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அக்னூர் அருகே ஒன்று, பதிண்டா அருகே மற்றொன்று. PAF 2, புல்வாமாவின் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே ஒரு ஆளில்லா விமானத்தையும் இந்திய ஜெட் விமானங்களையும் வீழ்த்தியது. இந்தியா பொதுமக்களைத் தாக்கியது; பாகிஸ்தான் இராணுவ இலக்குகளைத் தாக்கியது.

விரிவான விளக்கம்
பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் மே 7 ஆம் தேதி பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக 9 பயங்கரவாத முகாம்கள் தகா்க்கப்பட்டதுடன், குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் ஜெட் விமானங்களை தாக்கியதாகக் கூறி இரண்டு வெவ்வேறு செய்திகள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.
BREAKING: Dogfight between PAF & IAF ends in Indian defeat.
#BreakingNews #PAF #IAF #IndiaPakistan #AirStrike pic.twitter.com/YEqliY17BM
PAF downs 2 Indian jets — one near Akhnoor, another near Bathinda — plus a UAV near LoC, Pulwama.
India hit civilians; Pakistan struck military targets.
உண்மை என்ன?
பலகோடி தயாரிப்பில் பிரான்சில் இருந்து பெறப்பட்ட ரபேல் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய காட்சி என்று கூறி பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது உண்மையான வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
“Top o top” யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோ 'AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது' என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ளனர்.
பரவி வரும் வீடியோவைப் போன்றே பல AI வீடியோக்கள் இந்த யூடியூப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
இதே போன்று, பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் ஜெட் விமானங்களை தாக்கியதாகக் கூறி பரவி வரும் புகைப்படம் குறித்து ஆய்வு செய்ததில், இவை கடந்த 2021-ல் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பதை “Times of India“ வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிந்தது.
இதனை ஒன்றிய அரசின் “PIB Fact check” தளம் வெளியிட்டுள்ள செய்தியின் மூலமும் உறுதிபடுத்த முடிகிறது.
⚠️Propaganda Alert!
#old image showing a crashed aircraft is being circulated with the claim that Pakistan recently shot down an Indian Rafale jet near Bahawalpur during the ongoing #OperationSindoor… pic.twitter.com/LdkJ1JYuH0
Beware of old images shared by pro-Pakistan handles in the present context!
An
முடிவு:
நம் தேடலில், ரபேல் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய காட்சி என்றும், பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் ஜெட் விமானங்களை தாக்கியதாகவும் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பது உறுதியாகிறது.