YouTurn

போரில் இந்தியாவின் முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் மரணம் எனப் பரவும் தவறான செய்தி!

போரில் இந்தியாவின் முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் மரணம் எனப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோவிற்கும், தற்போது நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர் நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை .

பரவிய செய்தி

ஐயோ தாயே உன்னை இழந்து விட்டோமே, முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் (27)  வீர மரணம்.

X Link | Archive Link

விரிவான விளக்கம்

பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் மே 7 ஆம் தேதி பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் தகா்க்கப்பட்டதுடன், குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது


இந்நிலையில் தற்போது நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போர் நடவடிக்கைகளின் போது, முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் (27)  வீர மரணம் அடைந்தார் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பாஜகவினர் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.




உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் வீடியோவில் இருப்பவர் கிரண் ஷெகாவத் அல்ல என்பதை அறிய முடிந்தது. 

இந்திய கடற்படையில் லெப்டினன்டாக இருந்த கிரண் ஷெகாவத், கடந்த 2015 மார்ச் 24 அன்றே விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார் என்பதை NDTV வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிந்தது. மேலும் அதில், “லெப்டினன்ட் ஷெகாவத், 2010 இல் கடற்படையில் சேர்க்கப்பட்டார். அவர் ஒரு கண்காணிப்பாளராக உளவு விமானத்தில் உள்ள அனைத்து சென்சார்களுக்கும் பொறுப்பான அதிகாரியாக இருக்க பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் கோவா கடற்கரையின் தென்மேற்கில் கடலுக்கு அடியில் அவருடைய உடல் மீட்கப்பட்டது“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



எனவே தற்போது பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்தோம். இதன் மூலம், சமூக ஊடகங்களில் கடந்த மார்ச் 04-லிருந்தே உக்ரேனிய ஊடகங்களில் பரவி வரும் வீடியோ வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காண முடிகிறது.



இதன் மூலம் பரவி வரும் வீடியோவிற்கும், தற்போது  நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர் நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிறது. 


முடிவு: 


நம் தேடலில், இந்தியா பாகிஸ்தான் போர் நடவடிக்கைகளின் போது, முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் (27)  வீர மரணம் அடைந்தார் என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க