YouTurn

திமுக பரப்புரை மேடையில் விசிக சின்னம் புறக்கணிக்கப்பட்டதாக பரவும் பொய்!

திமுக பரப்புரை மேடையில் விசிக சின்னம் புறக்கணிக்கப்பட்டதாக பரவும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தர்மபுரியில் விசிக போட்டியிடவே இல்லை. அந்த மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணிக் கட்சியின் சின்னங்கள் மட்டுமே பேனரில் இடம்பெற்றுள்ளன. ஆனால் கடலூரில் நடைபெற்ற பரப்புரையில் விசிகவின் பானை சின்னம் பேனரில் இருப்பதை தெளிவாகப் பார்க்கலாம்.

பரவிய செய்தி

எங்கே பானை சின்னம்? தருமபுரியில் எதற்காக இந்த இருட்டடிப்பு? @arivalayam கூட்டணியில் அண்ணன் @thirumaofficial இருக்கிறாரா? இல்லையா? 

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

தருமபுரியில் திமுக பரப்புரை மேடையில் உள்ள பேனரில் விசிக சின்னம் புறக்கணிக்கப்பட்டது என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, பின் பக்கத்தில் உதயசூரியன், கைச் சின்னம், முரசு சின்னம் ஆகியவே இடம்பெற்றிருந்தது. 


உண்மை என்ன? 

முதலில் விசிக போட்டியிடும் தொகுதிகள் தொகுதிகள் குறித்து பார்த்தோம். திண்டிவனம், பெரியகுளம், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி, அரக்கோணம், திருப்போரூர், செய்யூர், காட்டுமன்னார் கோவில் ஆகிய 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை பார்க்கமுடிந்தது. 


இதையடுத்து தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட பரப்புரை குறித்த முழு வீடியோவையும் தேடிப் பார்த்தோம். அப்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் யூடியூப் பக்கத்தில், முழு வீடியோவும் இடம்பெற்றிருந்தது. அதில் பார்த்த போது, தருமபுரியில் விசிக போட்டியிடவில்லை என்பதால், அந்த மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணிக் கட்சியின் சின்னங்கள் மட்டுமே பேனரில் இடம்பெற்றுள்ளன என்பதை அறிய முடிந்தது. 


விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட பரப்புரை குறித்து பார்த்தோம். அதன்படி, கடலூரில் நடைபெற்ற பரப்புரையில் விசிகவின் பானை சின்னம் பேனரில் இருப்பதை தெளிவாகப் பார்க்கலாம். அதே போல் மறைமலைநகரில் நடைபெற்ற பரப்புரையிலும் விசிகவின் பானை சின்னம் இருந்ததை பார்க்கமுடிந்தது. 


மேலும் இதே போன்று திருப்பத்தூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்ட மேடையில், அந்த தொகுதியில் போட்டியிடும் உதயசூரியன் சின்னமும், ஏணி சின்னமும் மட்டுமே பேனரில் இடம்பெற்றுள்ளது. 


முடிவு: 

எனவே, தருமபுரியில் விசிக போட்டியிடவே இல்லை. அந்த மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணிக் கட்சியின் சின்னங்கள் மட்டுமே பேனரில் இடம்பெற்றுள்ளன. ஆனால் கடலூர், மறைமலைநகரில் நடைபெற்ற பரப்புரையில் விசிகவின் பானை சின்னம் பேனரில் இருப்பதை தெளிவாகப் பார்க்கலாம். இந்நிலையில் திமுக பரப்புரை மேடையில் உள்ள பேனரில் விசிக சின்னம் புறக்கணிக்கப்பட்டது என்று இன்பதுரை தவறானச் செய்திகளைப் பரப்பி வருகிறார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க