YouTurn

பிரபஞ்சம் முழுவதும் ஒலி மட்டுமே உள்ளதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு எனப் பரவும் தவறான செய்தி!

பிரபஞ்சம் முழுவதும் ஒலி மட்டுமே உள்ளதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு எனப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஒலி எனும் தன்மை மட்டும் தான் பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கிறது என்று LIGO - Laser Interferometer Gravitational-Wave Observatory ஆய்வகத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை.

பரவிய செய்தி

LIGO - Laser Interferometer Gravitational-Wave Observatory என்ற ஆய்வை பிரபஞ்சத்தில் மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் அடிப்படை என்னவென்றால் பிரபஞ்சம் முழுவதும் என்ன சக்தி இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது தான். நமக்கு சுவை, ஓசை, ஊறு, ஒளி, நாற்றம் என்று 5 தன்மைகள் இருக்கின்றன. இதே போன்று பிரபஞ்சம் முழுக்க என்ன தன்மை இருக்கும் என்று இந்த ஆய்வை மேற்கொண்டு பார்த்தார்கள். ஒலி என்ற ஒரே ஒரு தன்மை மட்டும் தான் பிரபஞ்சத்தில் முழுவதும் நிறைந்து இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள். 


இந்த ஆய்வு உலகம் முழுவதும் பேசப்பட்டது. ஏனென்றால் ஒலி என்ற ஒன்று தான் உலகம் முழுவதும் இருக்கிறது என்றால் அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இதே கருத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மணிவாசகர் தன்னுடைய திருவாசகம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 


Facebook Link:

விரிவான விளக்கம்

LIGO - Laser Interferometer Gravitational-Wave Observatory என்ற ஆய்வகம் ஒரு ஆய்வை பிரபஞ்சத்தில் மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் அடிப்படை என்னவென்றால் பிரபஞ்சம் முழுவதும் என்ன சக்தி இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது தான். நமக்கு சுவை, ஓசை, ஊறு, ஒளி, நாற்றம் என்று 5 தன்மைகள் இருக்கின்றன. இதே போன்று பிரபஞ்சம் முழுக்க என்ன தன்மை இருக்கும் என்று இந்த ஆய்வை மேற்கொண்டு பார்த்தார்கள். ஒலி என்ற ஒரே ஒரு தன்மை மட்டும் தான் பிரபஞ்சத்தில் முழுவதும் நிறைந்து இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள். 


இந்த ஆய்வு உலகம் முழுவதும் பேசப்பட்டது. ஏனென்றால் ஒலி என்ற ஒன்று தான் உலகம் முழுவதும் இருக்கிறது என்றால் அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இதே கருத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மணிவாசகர் தன்னுடைய திருவாசகம் நூலில் குறிப்பிட்டுள்ளார் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



உண்மை என்ன?


பரவி வரும் வீடியோவில் குறிப்பிட்டுள்ள “LIGO - Laser Interferometer Gravitational-Wave Observatory” குறித்து தேடிப் பார்த்ததில், LIGO எனும் ஆய்வகம் அமெரிக்காவில் Washington மற்றும் Louisiana என  இரண்டு இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டால் கணிக்கப்பட்ட “ஈர்ப்பு அலைகள் (Gravitational waves)” குறித்த ஆராய்ச்சிகளையே இந்த ஆய்வகங்கள் மேற்கொள்கின்றன என்பதை அறிய முடிந்தது.


மேலும் ஒலி எனும் தன்மை தான் பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கிறது என்று எந்த ஆய்வு முடிவையும் இந்த ஆய்வகம் வெளியிடவில்லை. 



பொதுவாக ஒலி, அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் கொண்டு செல்லப்படுகிறது. விண்வெளியில் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் இல்லாததால்,  ஒலியால் பயணிக்க முடியாது. எனவே, அதை விண்வெளியில் உணரவும் இயலாது.



விண்வெளியில் ஒளி, வெப்பம் ஆகியவற்றை மட்டுமே உணர முடியும். அப்படியானால், விண்வெளி வீரர்கள் எப்படி விண்வெளியில் ஒலியைக் கேட்கிறார்கள் என்ற சந்தேகம் எழலாம். அவர்கள் அங்கு “Sonification” எனப்படும் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள், அங்கு தரவுகள் ஒலியாக மாற்றப்பட்டு, அவர்கள் கேட்பதற்கு தகுந்தவாறு அனுமதிக்கப்படுகிறது.


மேலும் LIGO, NASAவின் ஒரு அங்கம் என்று கூறுவதும் தவறான தகவலே. அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையால் LIGO ஆய்வகத்திற்கு நிதியளிக்கப்படுகிறது மற்றும் California Institute of Technology (Caltech) மற்றும் Massachusetts Institute of Technology (MIT) ஆகியவற்றால் LIGO ஆய்வகம் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


முடிவு: 


நம் தேடலில், ஒலி எனும் தன்மை மட்டும் தான் பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கிறது என்று LIGO - Laser Interferometer Gravitational-Wave Observatory ஆய்வகத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க