YouTurn

மதுரை கோரிப்பாளையத்தில் இருப்பது சிக்கந்தர் தர்கா என்று பரவும் பொய் செய்தி!

மதுரை கோரிப்பாளையத்தில் இருப்பது சிக்கந்தர் தர்கா என்று பரவும் பொய் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள “ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்கா” நிர்வாகத்தினரை யூடரன் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு பேசியதில், கோரிப்பாளையம் தர்காவில் இருப்பது சிக்கந்தர் பாதுஷாவின் கல்லறை அல்ல. 'ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீனின்” கல்லறை. எனவே தான் தர்காவுக்கும் அவர் பெயரே வைக்கப்பட்டுள்ளது” என்று உறுதி செய்துள்ளனர்.

பரவிய செய்தி

மதுரை கோரிபாளையம்_தர்கா உள்ளே சிக்கந்தர்_பாதஷா_கல்லறை உள்ளது என தமிழக சுற்றுலாத் துறை உறுதி செய்கிறது. இது 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

image.png

Facebook Link / Archived Link

விரிவான விளக்கம்

மதுரை கோரிப்பாளையம் தர்காவில் தான் சிக்கந்தர் பாட்ஷா கல்லறை உள்ளதாக தமிழக சுற்றுலாத் துறை உறுதி செய்துள்ளதாகவும், திருப்பரங்குன்றம் மலைமேல் அவரது தர்கா இருப்பது பொய் என்றும் பரப்பப்படுகிறது. மேலும் கோரிப்பாளையம் தர்கா 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும், TamilnaduTourism. com  என்று ஒரு இணையதளப்பக்கமும் அதில் இடம்பெற்றிருந்தது. 



உண்மை என்ன? 

முதலில் பரவி வரும் பதிவில் இருந்த TamilnaduTourism. com இணைதளப்பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது அந்த பக்கத்தின் கடைசியில் Cholan Tours Private Limited என்று குறிப்பிட்டுயிருந்ததை பார்க்கமுடிந்தது. இதிலிருந்து இது Cholan Tours என்ற தனியார் சுற்றுலா அமைப்பின் இணையதளப்பக்கம் என்பது தெரியவந்தது. 

image.png


இதையடுத்து தமிழக சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில், கோரிப்பாளையம் தர்காவில் இருப்பது சிக்கந்தர் தர்கா தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை தேடினோம். ஆனால் அப்படியான எந்த தகவலும் அதில் குறிப்பிடவில்லை. 


கோரிப்பாளையம் தர்கா குறித்து வெளியான செய்திகளை ஆய்வு செய்தோம். அப்போது Hindu Tamilமாலைமலர் போன்ற ஊடகங்களில் கோரிப்பாளையம் தர்கா சந்தனக்கூடு திருவிழா குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள "புகழ் பெற்ற குத்துபுல் ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்கா" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் கோரிப்பாளையம் தர்கா 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதா என்பதை பார்த்தோம். அப்போது தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம், பிப்ரவரி 04 அன்று பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கோரிப்பாளையம் தர்கா 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள ‘ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன்’ பெயரே தர்காவுக்கும் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


இதை மேலும் உறுதி செய்ய,  இது குறித்து மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள “ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்கா” நிர்வாகத்தினரை யூடரன் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு பேசியதில், கோரிப்பாளையம் தர்காவில் இருப்பது சிக்கந்தர் பாதுஷாவின் கல்லறை அல்ல. 'ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீனின்” கல்லறை. எனவே தான் தர்காவுக்கும் அவர் பெயரே வைக்கப்பட்டுள்ளது” என்று உறுதி செய்துள்ளனர். 


முடிவு: 

எனவே, மதுரை கோரிப்பாளையம் தர்காவில் இருப்பது சிக்கந்தர் பாதுஷாவின் கல்லறை எனக் குறிப்பிட்டு தமிழக சுற்றுலாத் துறை உறுதி செய்துள்ளது எனப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை. பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது தமிழ்நாடு அரசின் இணையதளமே அல்ல. “சோழன் டூர்ஸ்” என்ற தனியார் சுற்றுலா அமைப்பின் இணையதளம். மேலும் கோரிப்பாளையத்தில் அமைந்துள்ளது, “ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்கா” என்று அதன் நிர்வாகத்தினர் உறுதி செய்தனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க