YouTurn

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு தடை விதித்ததா ஐசிசி? உண்மை என்ன?

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு தடை விதித்ததா ஐசிசி? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் “பாகிஸ்தானின் முடிவு ஐசிசி போட்டிகளின் நிலைத்தன்மை மற்றும் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும், இத்தொடரில் பங்கேற்கவிருக்கும் மற்ற நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சரியான தீர்வை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளது. இதில், பாகிஸ்தானை தடை செய்ததாகவோ அல்லது அபராதம் விதிப்பதாகவோ எவ்வித தகவலும் இல்லை.

பரவிய செய்தி

அதிரடி: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு 1 ஆண்டு தடை! 

​ஐசிசி (ICC) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:

​1 ஆண்டு தடை: 14-2 என்ற வாக்குகள் அடிப்படையில் PCB-க்கு ஓராண்டு தடை.

​PSL தடை: பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் ஓராண்டுக்கு ரத்து.

​வருவாய் குறைப்பு: ஆண்டு வருவாய் பங்கு 5.75%-லிருந்து 2.25%-ஆகக் குறைப்பு.

2040 வரை தடை: 2040-ம் ஆண்டு வரை பாகிஸ்தானில் ஐசிசி தொடர்களை நடத்த அனுமதி இல்லை.

விளையாட்டின் நேர்மையை காக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

பத்தாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 7 தொடங்கவிருக்கின்ற நிலையில், இந்தியாவுடன் கிரிக்கெட் வெளியிட மாட்டோம் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ஐசிசி அமைப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஓராண்டு தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகின்றது. மேலும் அதில் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிகளுக்கு ஓராண்டு தடை, 2040 ஆம் ஆண்டு வரை ஐசிசி தொடர்களை பாகிஸ்தான் நடத்த தடை, பாகிஸ்தானின் ஆண்டு வருவாய் 5.75 சதவீதத்திலிருந்து 2.25 சதவீதமாக குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புளும் இடம்பெற்றிருந்தது.


உண்மை என்ன? 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஐசிசி  1 ஆண்டு தடை விதித்ததாக பரவி வரும் செய்தி குறித்து தேடினோம். முதலில் ஐசிசியின் சமூக ஊடகப் பக்கங்களில் இது குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடினோம். ஆனால் இது போன்று எந்த அறிப்பும் வெளியாகவில்லை. 


ஆனால் ஐசிசியின் இணையத்தளத்தில், “ICC Statement on ICC Men’s T20 World Cup 2026” என்ற தலைப்பில் பிப்ரவரி 1, 2026 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில்  “பாகிஸ்தானின் முடிவு ஐசிசி போட்டிகளின் நிலைத்தன்மை மற்றும் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும், இத்தொடரில் பங்கேற்கவிருக்கும் மற்ற நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சரியான தீர்வை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளது. இதில், பாகிஸ்தானை தடை செய்ததாகவோ அல்லது அபராதம் விதிப்பதாகவோ எவ்வித தகவலும் இல்லை. இதனை எடிட் செய்து தான் தவறாக பரப்பி வருகின்றனர். 


முடிவு: 

எனவே, பாகிஸ்தானின் முடிவு ஐசிசி போட்டிகளின் நிலைத்தன்மை மற்றும் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும், இத்தொடரில் பங்கேற்கவிருக்கும் மற்ற நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சரியான தீர்வை எடுக்க வேண்டும் என்றே ஐசிசி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை எடிட் செய்து  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி தடை விதித்தாக தவறாகப் பரப்பி வருகிறனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க