யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது குறித்து பேட்டியளித்துள்ள ராஜேஷ்வரி, 2018ல் தனியார் நிறுவனத்தில் சேர்ந்து படித்தாகவும், பின்பு குரூப்-1 பயிற்சி அப்போலோ நிறுவனத்தில் பெற்றதாகவும் தெரிவித்தார். மேலும் தான் ஒரு நான் முதல்வன் திட்டத்தின் பயனாளி என்றும், ஆசிரியர் உதவி, நிதியுதி அதில் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
2025- ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் எனப்படும் யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மார்ச் 06 அன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவி அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். இதையடுத்து அவர் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தேர்ச்சி பெற்றதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ராஜேஷ்வரி நான் முதல்வன் திட்டம் மூலம் பயன்பெறவில்லை என்றும், தனியார் நிறுவனத்தில் தான் பயிற்சி பெற்றார் எனவும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
உருட்டா இருந்தாலும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா?
Appolo Study Centreஇல் படித்து TNPSC Group 1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2024 ஆம் ஆண்டில் Deputy Collector ஆயிருகாங்க இந்த சகோதரி. அதன் பின் தற்போது UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதுக்கு எதுக்கு நான் முதல்வன் ஸ்டிக்கர்… pic.twitter.com/QZzxzyUMrM
— CHE RAM (@A_n_b_e_S_i_vam) March 6, 2026
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தி குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது ETV Bharat ஊடகத்தில் ”கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபடுவேன்:யுபிஎஸ்சி தேர்வில் 2ஆம் இடம் பிடித்த ராஜேஸ்வரி உறுதி” என்ற தலைப்பில் மார்ச் 06, 2026 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் ETV Bharat ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், 'நான் முதல்வன்' திட்டத்தில் வழங்கப்படும் நிதி எனக்கு பேருதவியாக இருந்தது. முதல்நிலை தேர்வுக்கே மாதம் ரூ. 7500 தருகிறார்கள். இது மாணவர்கள் சுயமாக படிப்பதற்கான நம்பிக்கையை கொடுக்கிறது என கூறினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடியப் போது, ND TV ஊடகத்தில் “Tamil Nadu’s Rajeswari Suve Secures UPSC Air 2 In Fifth Attempt” என்று குறிப்பிட்டு அவர் பேட்டியளித்த முழு வீடியோவும் இடம்பெற்றிருந்தது. அதில் சரியாக 1:50 நிமிடத்தில் இதற்காக எந்த மாதிரியான பயிற்சி எடுத்தீர்கள் என்று செய்தியாளர் கேட்கிறார். அதற்கு பதிலளித்த ராஜேஷ்வரி, 2018ல் தனியார் நிறுவனத்தில் சேர்ந்து படித்தாகவும், பின்பு குரூப்-1 பயிற்சி அப்போலோ நிறுவனத்தில் பெற்றதாகவும் தெரிவித்தார். மேலும் தான் ஒரு நான் முதல்வன் திட்டத்தின் பயனாளி என்றும், ஆசிரியர் உதவி, நிதியுதவி கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
முடிவு:
எனவே, UPSC தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாது இடம் பிடித்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஷ்வரி, நான் முதல்வன் திட்டம் மூலம் பயன்பெறவில்லை என்று பரவும் தகவல் தவறானவை. தான் ஒரு ”நான் முதல்வன்” திட்டத்தின் பயனாளி என்று அவரேபல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
