YouTurn

முதல்வர் ஸ்டாலின் பெண்களை தாலி அணிய வேண்டாம் என்று கூறினாரா? உண்மை என்ன?

முதல்வர் ஸ்டாலின் பெண்களை தாலி அணிய வேண்டாம் என்று கூறினாரா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2015ஆம் ஆண்டில் திராவிடர் கழகத்தினர் பெரியார் திடலில் தாலி அகற்றும் போராட்டம் நடத்தினர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, முதல்வர் ஸ்டாலின் பெண்களை தாலி அணிய வேண்டாம் என்று கூறியதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

DMK 🇦🇴 சரியாநீங்களே சொல்லுங்க....

Instagram Link | Archived Link

விரிவான விளக்கம்

முதல்வர் ஸ்டாலின் பெண்களை தாலி அணிய வேண்டாம் என்று கூறியதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி முன்பு, பெண்கள் சிலர் தங்களது தாலி அகற்றும் காட்சி இடம்பெற்றிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது தெலுங்கு ஊடகமான Shakshi TV ஊடகத்தில் ”Dravidar kazhagam holds thaali removal function” என்ற தலைப்பில் ஏப்ரல் 14, 2015 அன்று இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் திராவிடர் கழகத்தினர் பெரியார் திடலில் தாலி அகற்றும் போராட்டம் நடத்தியதாக கூறப்பட்டிருந்தது. 


மேலும் இது குறித்து தேடிய போது, ”நீதிமன்ற தடை உத்தரவுக்கு முன்பாக தாலி அகற்றும் விழா” என்ற தலைப்பில் BBC Tamil ஊடகத்தில் ஏப்ரல் 2015 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் ஏப்ரல் 14 தாலி அகற்றும் நிகழ்ச்சியும், மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வில் தமிழக அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சதீஷ் கே. அக்னிஹோத்ரி, எம். வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக அதிகாலையிலேயே இந்த மனு விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெறும் முன்பாகவேது, தாலி அகற்றும் விழா ஏழு மணிக்கே துவங்கியது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த அந்த விழாவில் பங்கேற்று 21 பெண்கள் தங்கள் தாலிகளை அகற்றினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் One India Tamil ஊடகத்தில் ”சந்தோசமாக தாலியை அகற்றிவிட்டு... மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்ட தி.கவினர்!” என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் பெரியார் திடலில் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய திராவிடர் கழகத்தினர் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


முடிவு: 

எனவே, கடந்த 2015ஆம் ஆண்டில் திராவிடர் கழகத்தினர் பெரியார் திடலில் தாலி அகற்றும் போராட்டம் நடத்தினர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, முதல்வர் ஸ்டாலின் பெண்களை தாலி அணிய வேண்டாம் என்று கூறியதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க