YouTurn

போர் குறித்து பாகிஸ்தான் ஐஎஸ்பிஆர் தலைமை இயக்குநர் உட்பட பலர் பரப்பிய பொய் செய்திகள்!

போர் குறித்து பாகிஸ்தான் ஐஎஸ்பிஆர் தலைமை இயக்குநர் உட்பட பலர் பரப்பிய பொய் செய்திகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

பாகிஸ்தான் ஐஎஸ்பிஆர் தலைமை இயக்குநர் உட்பட, பாகிஸ்தான் ஊடகங்கள் பலவும், இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து பல்வேறு தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

பரவிய செய்தி 1: பாகிஸ்தான் ஐஎஸ்பிஆர் தலைமை இயக்குநர் தனது ஊடக சந்திப்பில், ஆஜ் தக் செய்தி  சேனல் வெளியிட்ட வீடியோவைப் பயன்படுத்தி, இந்தியாவின் விமானப்படைத் தளம் அழிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.


YouTube Link:


பரவிய செய்தி 2: இந்தியா பாகிஸ்தான் போரின் போது IAF விமானத்தில் விபத்து ஏற்பட்டது.


X Link | Archive Link


பரவிய செய்தி 3: பாகிஸ்தானின் சைபர் தாக்குதலால் இந்தியாவின் மின்சார கட்டமைப்பில் 70% செயலிழந்துவிட்டது.


X Link | Archive Link

விரிவான விளக்கம்

பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" மூலம் பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதற்கு பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது.


தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தரும் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன என்று அறிவித்தார். 


இந்நிலையில், பாகிஸ்தான் ஐஎஸ்பிஆர் தலைமை இயக்குநர் உட்பட, பாகிஸ்தான் ஊடகங்கள் பலவும், இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து பல்வேறு தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். 


பாகிஸ்தான் ஐஎஸ்பிஆர் தலைமை இயக்குநர் தனது ஊடக சந்திப்பின் போது, ஆஜ் தக் செய்தி சேனல் வெளியிட்ட வீடியோவைப் பயன்படுத்தி, இந்தியாவின் விமானப்படைத் தளம் அழிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். 



மேலும் இந்தியாவின் IAF விமானத்தில் விபத்து ஏற்பட்டது என்று கூறி ஒரு வீடியோவும், பாகிஸ்தானின் சைபர் தாக்குதலால் இந்தியாவின் மின்சார கட்டமைப்பில் 70% செயலிழந்துவிட்டது என்று கூறி மற்றொரு செய்தியும் பாகிஸ்தான் ஊடகங்களால் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. 



#OperationBunyanulMarsoos

— 💙محمد ابوبکر 👑 (@i__Abubakar) May 10, 2025


உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், பாகிஸ்தான் ஐஎஸ்பிஆர் தலைமை இயக்குநர் தனது ஊடக சந்திப்பின் போது, இந்தியாவின் விமானப்படைத் தளம் அழிக்கப்பட்டதாகக் கூறி பதிவு செய்த ஆஜ் தக் செய்தி சேனலின் வீடியோ முழு வீடியோ அல்ல, முழு வீடியோவின் ஒரு பகுதி மட்டுமே என்பதை அறிய முடிந்தது.  


முழு வீடியோவில், இந்தியப் படைகளால் பாகிஸ்தான் விமானப்படை தளம் அழிக்கப்பட்டது பற்றியே செய்தி சேனல் பேசுவதைக் காண முடிகிறது. ஆனால் வீடியோவின் சிறு பகுதியை மட்டும் குறிப்பிட்டு பாகிஸ்தான் ஐஎஸ்பிஆர் தலைமை இயக்குநர் தவறான செய்தியை பதிவு செய்துள்ளார். 



இதனை ஒன்றிய அரசின் “PIB Fact check” தளம் வெளியிட்டுள்ள செய்திகளின் மூலமும் உறுதி செய்ய முடிகிறது.


#Pakistan to mislead its own people by producing doctored footage as evidence.

The actual story in… pic.twitter.com/Bm2mKd12IO

— PIB Fact Check (@PIBFactCheck) May 12, 2025


அடுத்ததாக, ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் IAF விமானத்தில் விபத்து ஏற்பட்டது என்று கூறி பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில், அது கடந்த மார்ச் மாதம் ஹரியானாவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளான போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை New Indian Express வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் உறுதிபடுத்த முடிந்தது. 



#PIBFactCheck

✅ This video shows a Jaguar aircraft of the IAF that crashed in Ambala during a routine training… pic.twitter.com/mOT186mPJx

— PIB Fact Check (@PIBFactCheck) May 10, 2025


பாகிஸ்தானின் சைபர் தாக்குதலால் இந்தியாவின் மின்சார கட்டமைப்பில் 70% செயலிழந்துவிட்டது என்று கூறி மற்றொரு செய்தியும் பாகிஸ்தான் ஊடகங்களால் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. இவையும் போலியான செய்திகளே என்று ஒன்றிய அரசின் “PIB Fact check” தளம் உறுதிபடுத்தியுள்ளது. 


#Pakistan has caused 70% of India's electricity grid to become dysfunctional.#PIBFactCheck

❌This claim is
#FAKE#IndiaFightsPropaganda pic.twitter.com/8Gcmcm4vYq

— PIB Fact Check (@PIBFactCheck) May 10, 2025


முடிவு: 


நம் தேடலில், பாகிஸ்தான் ஐஎஸ்பிஆர் தலைமை இயக்குநர் தனது ஊடக சந்திப்பின் போது, இந்தியாவின் விமானப்படைத் தளம் அழிக்கப்பட்டதாகக் கூறிய செய்திகள் தவறானவை என்பதையும், ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் IAF விமானத்தில் விபத்து ஏற்பட்டது மற்றும் பாகிஸ்தானின் சைபர் தாக்குதலால் இந்தியாவின் மின்சார கட்டமைப்பில் 70% செயலிழந்துவிட்டது என்றும் பரவும் செய்திகளும் தவறானவையே என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க