YouTurn

பழைய வீடியோக்களை தற்போது இந்திய இராணுவம் நடத்திய ‘Operation Sindoor’ எனத் தவறாக பரப்பப்படுகிறது.

பழைய வீடியோக்களை தற்போது இந்திய இராணுவம் நடத்திய ‘Operation Sindoor’ எனத் தவறாக பரப்பப்படுகிறது.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அமெரிக்கா, பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட பழைய வீடியோக்களை தற்போது இந்திய இராணுவம் நடத்திய ‘Operation Sindoor’-வுடன் இணைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

”9 தீவிரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்திய இந்திய இராணுவம்” - News18 தமிழ்நாடு.



ஹிந்துஸ்தான் அடிக்க ஆரம்பித்தால்,... பாகிஸ்தான் பன்றிகள் துண்ட காணோம் துணியை காணோம் என்று ஓடுகிறார்கள் 

#ஆப்ரேஷன்_சிந்தூர் #OperationSindoor


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் நிலவுவதாக செய்திகள் வந்துகொண்டிருந்தன. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரித்தார். பிரதமர் மோடியும் அடுத்தடுத்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் சந்திப்புகள் நடத்தினார். மேலும், இந்தியாவில் 244 மாவட்டங்களில் போர்க் காலத்தில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றிய போர்க் கால ஒத்திகைகள் (mock drill) நடைபெற இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. 


இதனைத் தொடர்ந்து, மே 7ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்குOperation Sindoor’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 


இந்நிலையில், ‘Operation Sindoor’-ன் கீழ் இந்தியா பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் என சில வீடியோகள் ’News18 தமிழ்நாடு’ ஊடகம் உட்பட சிலரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது.





உண்மை என்ன?


Claim 1: ”9 தீவிரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்திய இந்திய இராணுவம்” என்று ஒரு வீடியோவை செய்தியாக வெளியிட்டிருக்கிறது News18 தமிழ்நாடு. இதனை சில சமூக வலைத்தளப் பயனர்களும் பரப்பிவருகிறார்கள்.


உண்மை: பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘KABUL NEWS’ என்ற செய்தி நிறுவனத்தின் சமூக வலைத்தளப் பக்கத்தில் இதே வீடியோவைக் கொண்ட ஒரு செய்தியைக் காணமுடிந்தது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதியிடப்பட்ட அந்த பதிவில், ’காஸா மீது இஸ்ரேல் குண்டு போடுவதை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், இதனால் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 பேர் கொல்லப்பட்டதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


இதிலிருந்து இந்த வீடியோ பாலஸ்தீன் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இன அழிப்பு போரில் காஸா மீது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் குண்டு  வீசி தாக்குதல் நடத்தியத போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. 


பின்னர் இந்த செய்தியை News18 தமிழ்நாடு ஊடகம் அதன் தளத்திலிருந்து நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.


Claim 2: குண்டு வெடித்து கட்டிடங்களும் வாகனங்களும் சிதறிக்கிடக்கும் வீடியோவை பதிவிட்டு இது ‘Operation Sindoor’-ன் போது இந்திய இராணும் தாக்குதல் நடத்திய போது எடுக்கப்பட்ட வீடியோ என்று பரப்பப்படுகிறது. 


உண்மை:  பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’DMP TV’  என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அதில், ’அமெரிக்காவில் உள்ள ‘பிலடெல்பியா’ என்னும் நகரத்தில் ஏற்பட்ட விமான விபத்து’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதனைக் கொண்டு மேலும் தேடியதில், ’10 PHILADELPHIA’ என்ற செய்தித்தளத்தில் இந்த விமான விபத்து குறித்த செய்தியைக் காணமுடிந்தது. அதில், ‘கடந்த 2025 ஜனவரி 31ஆம் தேதியன்று, பிலடெல்பியா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட மருத்துவ போக்குவரத்து விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானதாக’ குறிப்பிடுகிறது. 



இதிலிருந்து, இது கடந்த ஜனவரி மாதம் பிலடெல்பியா நகரத்தில் நடந்த விமான விபத்தால் ஏற்பட்ட சேதத்தை காட்சிபடுத்தும் வீடியோ இது என்பது உறுதியாகிறது.


முடிவு:


பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது,  பிலடெல்பியா நகரத்தில் நடந்த விமான விபத்து ஆகியவற்றின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோக்களை தற்போது பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய இராணுவம் நடத்திய ‘Operation Sindoor’-வுடன் இணைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க