YouTurn

இந்தியா டூடே கருத்து கணிப்பில் அதிமுக முன்னிலை என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

இந்தியா டூடே கருத்து கணிப்பில் அதிமுக முன்னிலை என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இறுதியாக அனைத்து மக்களவை தொகுதியிலும் இந்தியா டுடே ஊடகத்தால் ஆகஸ்ட் 2025ல் வெளியிடப்பட்ட “தேசத்தின் மனநிலை (MOTN) ஆகஸ்ட் 2025” என்ற கருத்துக் கணிப்பிலும், தற்போது லோக்சாபா தேர்தல் வைத்தாலும் கூட தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 39 இடங்களில், 36 இடங்களில் வெற்றி பெறும் என்றே கூறியுள்ளது.

பரவிய செய்தி

முந்துகிறார் எடப்பாடியார் இந்தியா டூடே கருத்து கணிப்பு

அதிமுக :142

திமுக : 88

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தற்போது அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் இந்தியா டூடே ஊடகம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளதாகவும், அதில் அதிமுக 142 தொகுதிகளிலும், திமுக 88 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரியவந்ததாகவும் சமூகவலைதளங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

முதலில் இந்தியா டூடே ஊடகம் தற்போது ஏதேனும் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். இது குறித்தான எந்த தகவல் கிடைக்கவில்லை. இந்தியா டூடேவின் செய்தி ஊடகங்களிலும் இது குறித்தான எந்த தகவலும் இல்லை.


இதையடுத்து இறுதியாக இந்தியா டூடே கருத்துக் கணிப்பு நடத்தியது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது ”Vijay may end up helping DMK, hurting NDA in Tamil Nadu, shows MOTN survey” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 28, 2025 வெளியான கட்டுரை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில்  மக்களவைத் தேர்தல் நடைபெற்றாலும், அதிமுகவுடனான உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டாலும், தமிழகம் பாஜகவால் எட்ட முடியாத இடமாகவே இருக்கும் என்றும், “தேசத்தின் மனநிலை (MOTN) ஆகஸ்ட் 2025” என்ற கருத்துக் கணிப்பில் பாஜக கட்சிக்கு மூன்று இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


அதே போல், தற்போது லோக்சாபா தேர்தல் வைத்தாலும் கூட தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 39 இடங்களில், 36 இடங்களில் வெற்றி பெறும். மொழிப் பிரச்சினைக்கு மத்தியில், ஒன்றிய அரசுக்கு எதிரான திமுகவின் இந்தித் திணிப்பு குற்றச்சாட்டுக்கு பொதுமக்களின் ஆதரவு இருப்பதைகவும் அதில் இருந்தது. 


முடிவு: 

எனவே, பரவி வரும் செய்தி போலியானது. ‘இந்தியா டுடே’ ஊடகம் வருகின்றன 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் குறித்து எந்த கருத்துக்கணிப்பையும் வெளியிடவில்லை. இறுதியாக 2025ல் லோக்சாபா தேர்தலுக்கு தான் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க