YouTurn

ரமலானுக்கு வழங்கிவிட்டு, பொங்கலுக்கு பரிசு தொகுப்பு வழங்காத முதல்வர் ஸ்டாலின் எனப் பரவும் தவறான செய்திகள்!

ரமலானுக்கு வழங்கிவிட்டு, பொங்கலுக்கு பரிசு தொகுப்பு வழங்காத முதல்வர் ஸ்டாலின் எனப் பரவும் தவறான செய்திகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

முதலமைச்சரின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையின் போது இந்துக்களுக்கு பொங்கல் தொகுப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை.

பரவிய செய்தி

முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரில் இன்று நடைபெற்ற இஸ்லாமியர்களுக்கான ரம்ஜான் பரிசு தொகுப்பு, ஆம் இது எல்லாருக்குமான ஆட்சி அதற்காகத்தான் பொங்கலுக்கு நமக்கு இந்துக்களுக்கு பொங்கல் தொகுப்பு எதுவும் வழங்கவில்லை..


X Link | Archive Link

விரிவான விளக்கம்

ரமலான் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், முதலமைச்சரின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையின் போது இந்துக்களுக்கு பொங்கல் தொகுப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


Content not available.


Content not available.


உண்மை என்ன?


"முதலமைச்சரின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையின் போது இந்துக்களுக்கு பொங்கல் தொகுப்பு எதுவும் வழங்கப்படவில்லை" என்று பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், ரமலான் பண்டிக்கைக்கு முதல்வரால் தற்போது 2500 பேருக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது உண்மையே என்பதை அறிய முடிந்தது. 


Content not available.


ஆனால் பொங்கல் பண்டிகைக்கு முதல்வர் ஸ்டாலின் எந்த பரிசுத் தொகுப்பினையும் வழங்கவில்லை என்று பரவும் செய்திகள் தவறானவை. ரமலானுக்கு வழங்கியது போன்றே, ஜனவரி 11, 2025 அன்று தனது கொளத்தூர் தொகுதியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் 1000 நபர்களுக்கு பொங்கல் பரிசுப் தொகுப்பினை அவர் வழங்கியுள்ளார். 


இது குறித்த செய்திகளை அமைச்சர் சேகர்பாபுவின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்கள் மூலம் அறிய முடிகிறது. மேலும் அப்பதிவில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.01.2025), கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற ‘சமத்துவப் பொங்கல் விழா - 2025’-இல் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவ - மாணவியர்களுடன் சமத்துவப் பொங்கல் வைத்து, 1000 நபர்களுக்கு புத்தாடைகள், பொங்கல் பொருட்கள், கரும்பு, குடை, பரிசுப் பொருட்கள் உள்ளடக்கிய பொங்கல் பரிசுப் தொகுப்பினை வழங்கி  வாழ்த்தினார்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Content not available.


முடிவு: 


நம் தேடலில், முதலமைச்சரின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையின் போது இந்துக்களுக்கு பொங்கல் தொகுப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க