யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திவ்யா சத்யராஜ் ஊட்டசத்து நிபுணர் மட்டுமே, டாக்டர் அல்ல. அவர் குறித்து வெளியான பல்வேறு செய்தியிலும் அவர் ஊட்டசத்து நிபுணர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர் மருத்துவர் என்று தவறான தகவலை பரப்பு வருகின்றனர்.
பரவிய செய்தி
நகடிர் சத்யராஜின் மகளும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளருமான திவ்ய சத்யராஜ் மருத்துவர் - செயற்பாட்டாளர் முரளி

விரிவான விளக்கம்
Red Pix யூடியூப் சேனலில் ஊடகவியலாளர் பெலிக்ஸ் மற்றும் செயற்பாட்டாளர் முரளி இடையே நடைபெற்ற நேர்காணல் ஒன்று அக்டோபர் 4, 2025 அன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில் பேசிய செயற்பாட்டாளர் முரளி, நகடிர் சத்யராஜின் மகளும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளருமான திவ்ய சத்யராஜ் மருத்துவர் என்றும், அவரால் மற்றவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைக்கவில்லை எனவும் பேசியிருந்தார்.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தி குறித்து முதலில் தேடி பார்த்தோம். அப்போது திவ்ய சத்யராஜின் சமூக வலைதளப்பக்கங்களில் ஆராய்ந்தோம். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் BIOவில், ஊட்டச்சத்து நிபுணர், அரசியல்வாதி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் எங்கும் அவர் மருத்துவர் என்று குறிப்பிடவில்லை.

இது குறித்து மேலும் தேடிப் பார்த்தோம். The Hindu ஊடகத்தில் ” Actor Sathyaraj's daughter Divya joins DMK” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா திமுகவில் இணைந்தார் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் Suman Clinic என்ற இணையதளப்பக்கத்தில், மார்ச் 5, 2020 அன்று திவ்யா சத்யராஜ் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் திவ்யா சத்யராஜ் 2006 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பிரிவில் தனது முதுகலைப் பட்டம் பெற்றார். தற்போது சுமன் கிளினிக்கில் ஊட்டச்சத்து ஆலோசகராக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே திவ்யா சத்யராஜ் ஊட்டசத்து நிபுணர் மட்டுமே, மருத்துவர் அல்ல. அவர் குறித்து வெளியான பல்வேறு செய்தியிலும் அவர் ஊட்டசத்து நிபுணர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர் மருத்துவர் என்று தவறான தகவலை பரப்பு வருகின்றனர்.