YouTurn

மழை நிவாரண பணிகளுக்காக ஒன்றிய அரசிடம் ரூ.5,000 கோடி கேட்க உள்ள முதலமைச்சர் என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

மழை நிவாரண பணிகளுக்காக ஒன்றிய அரசிடம் ரூ.5,000 கோடி கேட்க உள்ள முதலமைச்சர் என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காட்சி

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2023-ல் மிக்ஜாம் புயலின் போது வெளியிடப்பட்ட செய்தி இது. இதை தற்போது பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

4000 கோடி கொ*ளையடித்து பத்தாதுன்னு அடுத்த 5000 கோடிக்கு அடி போடுறான் திருட்டு பய..

பிச்சை என்றவுடன் "ஒன்றிய அரசு" "மத்திய அரசு" ஆகி விட்டது.... 

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

வங்கக் கடலில் நவம்பர் 27 ஆம் தேதி உருவான டிட்வா புயலினால், சென்னையில் கடந்த  வாரம் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி, மக்கள் அவதி அடைத்தனர். 

இந்நிலையில் மழை நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.5,000 கோடி கேட்க உள்ளோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தாக தந்தி டிவி ஊடகத்தில் வெளியான செய்தியின் screenshot ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் அந்த screenshot-ஐ கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Emirates Tamil News என்ற யூடியூப் பக்கத்தில் டிசம்பர் 5, 2023 அன்று, “மத்திய அரசிடம் ரூ.5,000 கோடி கேட்கப்படும் - முதலமைச்சர்” என்ற தலைப்பில் இதே screenshot, வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 

image.png


இது குறித்த செய்தியை தேடிப் பார்க்கும் போது, கலைஞர் டிவி நியூஸ் ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் “ஒன்றிய அரசிடம் ரூ.5,000 கோடி நிவாரணம் கேட்கப்படும்! - CM MK Stalin பேட்டி!” என்ற தலைப்பில் டிசம்பர் 5, 2023 அன்று முதலமைச்சர் அளித்த முழு பேட்டியும் இடம்பெற்றிருந்தது. அதில்,  மிக்ஜாம் புயலால் 47 ஆண்டுகளில் காணாத மழையை கண்டுள்ளோம் எனக் கூறிய முதலமைச்சர், 4,000 கோடி ரூபாய் பணிகள் செய்தும் சென்னை மிதப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை அரசியலாக்க விரும்பவில்லை என்றும்,  4,000 கோடி ரூபாய்க்கு திட்டப்பணிகள் செய்ததால் தான் சென்னை தப்பித்ததாகவும் தெரிவித்தார். 

மேலும் வரலாறு காணாத மழையால், மத்திய அரசிடம் இருந்து ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார். 


அதே போல் நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகப்பக்கத்திலும், ”ரூ.4000 கோடி செலவு செய்தும் சென்னை மிதக்கிறதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்” என்ற தலைப்பில் இது குறித்து டிசம்பர் 5, 2023 அன்று செய்தி வெளியாகியிருந்ததையும் பார்க்கமுடிந்தது. 

image.png


முடிவு: 

நம் தேடலில், கடந்த 2023-ல் மிக்ஜாம் புயலின் போது வெளியிடப்பட்ட செய்தி இது. இதை தற்போது பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க