யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். இதை தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
கர்நாடகாவில் இருந்து வந்த பண்டாரம் எப்படி எழுர்ச்சி தமிழன் ஆனான்? யாராவது சிந்தித்தது உண்டா?
விரிவான விளக்கம்
விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கடந்த 2001 ஆம் ஆண்டு தேர்தலில் கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் போட்டியிட்டுள்ளார் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் பரவி வரும் பதிவுகளில், “அவர் தமிழ்நாட்டில் போட்டியிடாமல் கர்நாடகாவில் போட்டியிட்டு தான் எழுச்சி தமிழர் ஆகியுள்ளார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்னாடக வில் இருந்து வந்த பண்டாரம்
எப்படி எழுர்ச்சி தமிழன் ஆனான் ?
யாராவது சிந்தித்தது உண்டா ? pic.twitter.com/4WsYRnpFjo
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து தேடிப் பார்த்ததில், இது கர்நாடகாவில் உள்ள மங்களூர் அல்ல என்பதை அறிய முடிந்தது.
“One India Tamil” பரவி வரும் செய்திகள் குறித்து “மங்களூர் தொகுதியில் திருமாவளவன் போட்டி“ என்ற தலைப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டில் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். தங்களது கட்சியினர் போட்டியிடும் 2 வது வேட்பாளர்பட்டியலையும் அறிவித்தார்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை உறுதி செய்ய தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் குறித்து கூகுள் வரைபடத்திலும் ஆய்வு செய்து உறுதி படுத்தியுள்ளோம்.
முடிவு:
நம் தேடலில், கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். இதை கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரில் அவர் போட்டியிட்டதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.