யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திருமாவளவன் பேசியுள்ள வீடியோவின் சிறு பகுதியை மட்டும் எடுத்து தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் மேடையில் பேசும்போது “திமுக ஒரு தீய சக்தி” என்று மூன்று முறை கூறுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. வீடியோவைப் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் “திருமாவளவன் தன் வாயாலேயே உண்மையை சொல்லிவிட்டார்“ என்று குறிப்பிட்டு வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
நன்றி அண்ணே @thirumaofficial ! pic.twitter.com/x2nbIMBJfa
திமுக ஒரு தீய சக்தி
திமுக ஒரு தீய சக்தி
திமுக ஒரு தீய சக்தி
Dmk oopis @Senthilvel79@DrSharmila15 @U2Brutus_off @svelponraj @lakhinathan @sugunadiwakar @MMathivadhani @Milton_Off @THE_INDRA_KUMAR @Arunan22 சோற்றில் மண்ணள்ளி
போட்ட திருமாவளவன் pic.twitter.com/YVK3ZNw3IR
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் (Google Reverse Image Search) மூலம் தேடிப் பார்த்ததில் இதன் முழு வீடியோ கிடைத்தது.
“Thanthi TV“ ஊடகப் பக்கத்தில் டிசம்பர் 23 அன்று வெளியிடப்பட்டுள்ள முழு வீடியோவில், “தவெக தலைவர் விஜய்க்கு ஒரே நோக்கம் (Agenda) தான். “திமுக ஒரு தீய சக்தி, திமுக ஒரு தீய சக்தி, திமுக ஒரு தீய சக்தி” என்று திட்டுகிறார். திமுகவை வீழ்த்த நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்காகவே விஜய் கட்சி தொடங்கியுள்ளார்” என்றே கூறியுள்ளார். இந்நிலையில் திருமாவளவன் பேசியுள்ள வீடியோவின் சிறு பகுதியை மட்டும் எடிட் செய்து சமூக ஊடகப் பக்கங்களில் பரப்பி வருகின்றனர்.
இதனை, புதியதலைமுறை“ ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை ஆய்வு செய்ததன் மூலமும் உறுதி செய்ய முடிகிறது.
"சீமானும், விஜயும் ஆர்.எஸ்.எஸ், பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்" - மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
#VCK | #Thirumavalavan | #Vijay | #TVK | #Seeman | #NTK | #Tiruparankundram | #Madurai | #BJP | #RSS | #DMK pic.twitter.com/ybV4Gm1seo
முடிவு:
நம் தேடலில், மேடையில் விசிக தலைவர் திருமாவளவன் “திமுக ஒரு தீய சக்தி” என்று கூறியதாகப் பரவும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை என்பது உறுதியாகிறது.