யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“தவெக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், சேலத்தில் விஜய் பங்கேற்ற கூட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதிகோரி வழங்கிய கடிதத்தில், மதியம் 12:00 மணி முதல் 3:00 மணிக்குள் கூட்டம் நடத்துவதாகவே குறிப்பிட்டுள்ளார்” என்று தமிழ்நாடு காவல்துறை கடிதத்துடன் விளக்கமளித்துள்ளது.
பரவிய செய்தி
வேணும்னே 12 - 3 மணி வரை அனுமதி குடுத்து,
வெயில் தாங்காம மயக்கம் போட்டுடாங்கனு சொல்லணும் ,
ஒரு கூட்டத்த கூட ஒழுங்கா நிர்வாகிகள் சந்திப்ப கூட நடத்த தெரியலையேனு, Debate Show நடத்தணும் ,
இவரா தலைவர் , இவரா அரசியலுக்கு தகுந்தவர்னு அவதூறு பரப்பணும் ,
இப்படியே தானே கரூர் மக்களையும் கொன்றுப்பாரு, அப்பயும் திருந்தாத மக்கள்னு ,
மக்கள் மேல் பழிய தூக்கி வைக்கணும் ,
கவர்ச்சி இன்னும் எத்தனை உயிர்கள வாங்கபோகுது-னு சொல்ல வைக்கணும் ..
விலைக்கு வாங்குன நாதக கட்சிய விட்டு பேசவைக்கணும்…
அரசியலுக்கு லாயிக்கு இல்லாதவர்னு பரப்பணும் ,
அதானடா அதேதான்…

விரிவான விளக்கம்
சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி திடலில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர். அதேசமயம், கூட்டம் நடைபெற்ற இடத்தில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்ததால், மகாராஷ்டிராவை சேர்ந்த வெள்ளி பட்டறை தொழிலாளியான சூரஜ் (37) என்பவர் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தை உச்சி வெயிலில் நடத்த காவல்துறை நிர்பந்தித்ததாக பதிவு வைரலாகி வருகிறது.
வேணும்னே 12 - 3 மணி வரை அனுமதி குடுத்து,
வெயில் தாங்காம மயக்கம் போட்டுடாங்கனு சொல்லணும் ,
ஒரு கூட்டத்த கூட ஒழுங்கா நிர்வாகிகள் சந்திப்ப கூட நடத்த தெரியலையேனு, Debate Show நடத்தணும் ,
இவரா தலைவர் , இவரா அரசியலுக்கு தகுந்தவர்னு அவதூறு பரப்பணும் ,
இப்படியே தானே கரூர் மக்களையும்… pic.twitter.com/TMX7qXl0Uc
உண்மை என்ன?
சேலத்தில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதியளித்தது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது தமிழ்நாடு காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் பிப்ரவரி 13 அன்று, மதியம் 12:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டாளர் அனுமதி கோரியதால், காவல்துறை அதற்கேற்ப அனுமதி வழங்கியது என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுருந்தது. தவெக சேலம் தெற்கு மாநகர செயலாளர் பிரச்சன பாலாஜி, அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளருக்கு, தமிழக வெற்றிக் கழக உள்மைதானத்தில் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக் கேட்டிருந்தது அந்த அறிக்கையில் பார்க்கமுடிந்தது.
As the organiser requested permission for the event from 12:00 PM to 3:00 PM, the police granted permission accordingly. pic.twitter.com/1c918vqHDb
அதில் பிப்ரவரி 13 அன்று மதியம் 12 மணி முதல், மதியம் 3 மணி வரை சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சர்வீஸ் சாலை அருகில் சுற்றுச்சுவருடன் உள்ள KVP கார்டனில் திறந்த வேலி மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்தவுள்ளார். கழக பிரச்சார வாகனத்தில் இருந்து தலைவர் உரையாற்றுகிறார். இதில் 4,998 கழக நிர்வாகிகளும், உறுப்பினர்கள் மட்டும் கலந்துக் கொள்வார்கள் என்று தெளிவாக குறிப்பிட்டுருந்ததை பார்க்கமுடிந்தது.
முடிவு:
எனவே, சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தை உச்சி வெயிலில் நடத்த காவல்துறை நிர்பந்தித்ததாக பரவி வருவது தவறானச் செய்தியாகும். தவெக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், சேலத்தில் விஜய் பங்கேற்ற கூட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதிகோரி வழங்கிய கடிதத்தில், மதியம் 12:00 மணி முதல் 3:00 மணிக்குள் கூட்டம் நடத்துவதாகவே குறிப்பிட்டுள்ளார்.