யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டுவிட்டது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக்கொண்டார் என நடிகர் சூரி கூறியதாகப் பரவி வரும் செய்திகள் போலியானவை. இது குறித்து எந்த கருத்தையும் தான் கூறவில்லை என்று நடிகர் சூரி உறுதிபடுத்தியுள்ளார்.
பரவிய செய்தி
பேரழிவோ, பெருந்துயரமோ, ஒரு அரசியல் கட்சி அன்றாடம் எப்போதும் மக்களுடன் நிற்க வேண்டும்!
ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டு TALI போட்டுவிட்டுது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக்கொண்டார்.
- நடிகர் சூரி

விரிவான விளக்கம்
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட போது நடந்த கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தை காண தவெகவின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இந்நிலையில் பேரழிவோ, பெருந்துயரமோ, ஒரு அரசியல் கட்சி அன்றாடம் எப்போதும் மக்களுடன் நிற்க வேண்டும்.
ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டுவிட்டது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக்கொண்டார் என நடிகர் சூரி கூறியதாக Political talkies என்ற சமூக ஊடகப்பக்கத்தில் இருந்து நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
வயசுக்கு வந்த பொண்ணுக்கூட வெளிய வந்திருக்கும்டா அணில்ஸ் 😂😂 pic.twitter.com/4tTm4RercM
உண்மை என்ன?
பரவி வரும் இந்த நியூஸ் கார்ட்டில் உள்ளது போல், ஏதேனும் Main stream ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடினோம். இப்படி நடிகர் சூரி கூறியதாக எதிலும் செய்தி வெளியாகவில்லை.
இதையடுத்து சூரி அண்மையில் அளித்த பேட்டிகளை தேடிப் பார்க்கும் போது, பரவி வரும் செய்தியில் உள்ளது போல் எதிலும் பேசவில்லை. அவரது சமூக வலைதளப்பக்கங்களில் தேடிப் பார்த்த போது, கரூர் சம்பவம் குறித்து எந்த பதிவுகளும் அவர் வெளியிடவில்லை என்பதையும் பார்க்கமுடிந்தது.

மாறாக நடிகர் சூரியின் எக்ஸ் பக்கத்தில், பரவி வரும் அந்த நியூஸ் கார்ட் குறித்து கருத்து தெரிவித்திருந்ததை பார்க்கமுடிந்தது. இது போலியான நியூஸ் கார்ட் என்று குறிப்பிட்ட அவர், தவறான தகவலைப் பரப்புவது எப்போதும் சமூகத்துக்கு தீங்கையே தரும். ஆகையால் நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நிதானமும் முதிர்ச்சியும் காட்டுவோம். இந்த சமூகம் நல்ல மாற்றங்களைப் பெற தகுதியானது. அதனால் நன்மையும் அன்பும் பரப்புவதில் உங்கள் சிறந்ததைச் செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

முடிவு:
எனவே, ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டுவிட்டது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக்கொண்டார் என நடிகர் சூரி கூறியதாகப் பரவி வரும் செய்திகள் போலியானவை. இது குறித்து எந்த கருத்தையும் தான் கூறவில்லை என்று நடிகர் சூரி உறுதிபடுத்தியுள்ளார்.