யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உண்மையான கருத்துக்கணிப்பில் “இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்? என்று சாணக்யா & தினமலர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என 38% பேர், திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று 33% பேர், தவெக வெற்றி பெறும் என 22% பேர், நாதக வெற்றி பெறும் என்று 7% பேர் தெரிவித்துள்ளனர்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
#மடக்கு_ஊதிகளா என்னயா 3% இந்த முக்கு முக்குது
மொதல்ல 234 தொகுதியில டெபாசிட் வாங்க முடியுமான்னு பாருங்கடா பனையூர் தற்குறிகளே
சமீபத்திய சர்வே விவரங்கள் சொல்லும் தகவல்:
"திமுக ஆட்சிக்கு வரக்கூடாது,
அதே நேரம் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் எண்ணுகிறார்கள்.
#EPSfor2026
ADMK For 2026

விரிவான விளக்கம்
சாணக்யா ஊடகத்தின் நிறுவனர் ரங்கராஜ் பாண்டே, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான எடுத்த சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளதாகவும், அதில் அதிமுக 54%, திமுக 40%, தவெக 3%, நாதக 3% வாக்குகளை பெறும் என்றும் தெரிவித்து பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய சர்வே விவரங்கள் சொல்லும் தகவல்:
"திமுக ஆட்சிக்கு வரக்கூடாது,
அதே நேரம் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் எண்ணுகிறார்கள். #EPSfor2026✌️🌱
ADMK For 2026 🖤🤍❤️ pic.twitter.com/gXkLmsRMBU
#மடக்கு_ஊதிகளா என்னயா 3% இந்த முக்கு முக்குது
மொதல்ல 234 தொகுதியில டெபாசிட் வாங்க முடியுமான்னு பாருங்கடா பனையூர் தற்குறிகளே😂
சமீபத்திய சர்வே விவரங்கள் சொல்லும் தகவல்:
"திமுக ஆட்சிக்கு வரக்கூடாது,
அதே நேரம் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் எண்ணுகிறார்கள்.… pic.twitter.com/Bh6GB18YnU
உண்மை என்ன?
இதையடுத்து முதலில் சாணக்யா ஊடகத்தி சட்டமன்ற தேர்தலுக்கான சர்வே முடிவுகள் ஏதேனும் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை தேடினோம். அப்போது தினமலர் ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில், சாணக்யா & தினமலர் ஊடகங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பை பார்க்கமுடிந்தது. ”2026 தமிழக சட்டசபை தேர்தல் | அரியணை யாருக்கு? | Dinamalar–Chanakyaa Survey | Rangaraj Pandey | 02” என்ற தலைப்பில் ஜனவரி 28 அன்று அந்த வீடியோ வெளியாகியிருந்தது.
அதில் இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்? என்று கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் அதிமுக கூட்டணிக்கு 38% பேர், திமுக கூட்டணிக்கு 33% பேர், தவெகவுக்கு 22% பேர், நாதகவுக்கு 7% பேர் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளனர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து சாணக்யா ஊடகத்திலும் ஜனவரி 29 அன்று நியூஸ் கார்ட் ஒன்று வெளியாகியிருந்தது. அதில் இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்? என்று சாணக்யா&தினமலர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என 38% பேர், திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று 33% பேர், தவெக வெற்றி பெறும் என 22% பேர், நாதக வெற்றி பெறும் என்று 7% பேர் தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
யார் வெற்றி பெறுவார்?#rangarajpandey #Dinamalar #2026Election
சாணக்யா & தினமலர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு
LINK --->>> https://t.co/6hxowbL6Kl
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW pic.twitter.com/E09K13P4fx
முடிவு:
எனவே, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான எடுத்த சர்வே முடிவுகள் என்று பரவும் தகவல் தவறானது. உண்மையான கருத்துக்கணிப்பில் “இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்? என்று சாணக்யா & தினமலர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என 38% பேர், திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று 33% பேர், தவெக வெற்றி பெறும் என 22% பேர், நாதக வெற்றி பெறும் என்று 7% பேர் தெரிவித்துள்ளனர்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.