யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அகமதாபாத் மாநகராட்சியில் (AMC) உள்ள பாபுநகரில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட 450 க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டது குறித்து மதவாதத்தை தூண்டும் விதமாக பரவி வரும் செய்திகள் தவறானவை.
பரவிய செய்தி
அகமதாபாத்தின் பாபுநகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 450க்கும் மேற்பட்ட வீடுகள் சில மணி நேரங்களுக்குள் இடிக்கப்பட்டன. இவற்றில், 251 குடும்பங்களுக்கு ஏற்கனவே PMAY வீடுகள் இருந்தன, ஆனால் அவற்றை வாடகைக்கு விட்டிருந்தனர், மேலும் Md. பாசல் என்ற நபர் அவர்கள் அனைவரிடமிருந்தும் வாடகையை வசூலித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியில் திரங்கா யாத்திரையும் தாக்கப்பட்டது. குஜராத் காவல்துறை தற்போது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.
விரிவான விளக்கம்
அகமதாபாத் மாநகராட்சியில் (AMC) உள்ள பாபுநகரில் மே 29 அன்று இரண்டு மணி நேரத்திற்குள், சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட 450 க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.
இந்நிலையில், “இடிக்கப்பட்ட வீடுகளில், 251 குடும்பங்களுக்கு ஏற்கனவே PMAY வீடுகள் கொடுக்கப்பட்டிருந்தன, ஆனால் அவற்றை அவர்கள் வாடகைக்கு விட்டிருந்தனர். மேலும் பாசல் என்ற நபர் அவர்கள் அனைவரிடமிருந்தும் வாடகையை வசூலித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியில் நடைபெற்ற திரங்கா யாத்திரையையும் அப்பகுதி மக்கள் தாக்கியுள்ளனர். குஜராத் காவல்துறை தற்போது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
मिनी बांग्लादेश के सफाये के बाद गुजरात अहमदाबाद के बापूनगर में फिर 450 अवैध मकानों
पर बुल्डोजर चला
गुजरात सरकार फुल फॉर्म में है🔥🔥💪💪 pic.twitter.com/sjZpPu2hwB
🚨 Gujarat mein Bapunagar, Ahmedabad se badi khabar:
450 se zyada illegally bane ghar kuch hi ghanto mein tod diye gaye. Inme se 251 families ke pass pehle se PMAY houses the, lekin unhone wo rent pe de rakhe the, aur ek aadmi, Md. Fazal, sabka rent collect kar raha tha.
Kuch… pic.twitter.com/ihLWdUVuum
உண்மை என்ன?
அகமதாபாத் மாநகராட்சியில் (AMC) உள்ள பாபுநகரில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட 450 க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டது குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இவ்வாறு அப்புறப்படுத்துவதற்கான அறிவிப்புகள் கடந்த 2011 மற்றும் 2014-ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டுள்ளன என்பதை செய்திகளின் மூலம் அறிய முடிந்தது.

இதே போன்று, 2011 மற்றும் 2014ல் ஆக்கிரமிப்புக்களை காலிசெய்யுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டு, 221 குடும்பங்களுக்கு ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் (JnNURM) திட்டத்தின் கீழ் வேறு இடத்தில் வீடுகள் வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும், “Indian Express“ வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிந்தது.

இதன் மூலம், “சமீபத்தில் நடைபெற்ற திரங்கா யாத்திரையை அப்பகுதி மக்கள் தாக்கியுள்ளனர், மேலும் அங்கு உள்ள வீடுகளை இஸ்லாமியர் ஒருவர் வாடகைக்கு விட்டு வசூல் செய்து வந்துள்ளார். உடனே தான் அங்குள்ள வீடுகள் அகமதாபாத் மாநகராட்சியால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன” என்பன போன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் ஆதாரப்பூர்வமற்றவை என்பதை அறிய முடிகிறது.
மேலும், 251 குடும்பங்களுக்கு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (PMAY) திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டதாக பரவும் செய்திகளும் தவறானவை. அவர்களுக்கு ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் (JnNURM) திட்டத்தின்கீழே வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
முடிவு:
நம் தேடலில், அகமதாபாத் மாநகராட்சியில் (AMC) உள்ள பாபுநகரில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட 450 க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டது குறித்து மதவாதத்தை தூண்டும் விதமாக பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.