YouTurn

கோவையில் கிரிக்கெட் மைதானத்திற்கான பணிகள் தொடங்கவில்லையா? உண்மை என்ன?

கோவையில் கிரிக்கெட் மைதானத்திற்கான பணிகள் தொடங்கவில்லையா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

கோயம்புத்தூரில் அமைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர்களை தமிழ்நாடு அரசு சமீபத்தில் கோரியுள்ளது. இவை உறுதி செய்யப்பட்டவுடன், டிசம்பர் பிற்பகுதியிலிருந்து 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பணிகள் தொடங்கும் என TIDCO நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

பரவிய செய்தி

Sir, Leave alone Metro Projects. 

Please update us about the status and funding for Coimbatore Cricket Stadium which was Promised 1.5 years back by your party. 

Everyone knows not even a brick would have been laid.

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதி கோரி தமிழ்நாடு அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைகளை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது. கோவை, மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். 

இந்நிலையில் கோவையில் புதிய கிரிக்கெட் மைதானம் கட்டப்படும் என்று ஏப்ரல் 7, 2024 அன்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட எக்ஸ் பதிவை குறிப்பிட்டு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதியளிக்கப்பட்ட கோவை கிரிக்கெட் மைதானத்தின் நிலை மற்றும் நிதி குறித்து தெரிவிக்கவும் என்றும், ஒரு செங்கல் கூட போடப்பட்டிருக்காது என்றும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

கோவை கிரிக்கெட் மைதானம் குறித்து கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது Times Of India ஊடகத்தில் நவம்பர் 1,2025 அன்று, ”Work on Rs 500-cr cricket stadium in Coimbatore to begin in Dec-Jan” என்ற தலைப்பில் வெளியான செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் கோயம்புத்தூரில் 30 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடி செலவில் அமைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகளுக்கான விரிவான விவரக்குறிப்புகளுடன் டெண்டர்களை தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த அரங்கம் 25,000 முதல் 30,000 பேர் வரை அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்படவுள்ளது. மேலும் இவை உறுதி செய்யப்பட்டவுடன், டிசம்பர் பிற்பகுதியிலிருந்து 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பணிகள் தொடங்கும் என TIDCO நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

image.png


இது குறித்து மேலும் தேடிய போது,  கோவை ஒண்டிப்புதூரில் சுமார் 20.18 ஏக்கர் பரப்பளவில் 25,000-30,000 இருக்கைகளுடன் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் 10 ஏக்கரில் வணிக வளாகத்தை PPP முறையில் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது என்று சன் நியூஸ் ஊடகத்தில் அக்டோபர் 31 அன்று வெளியான செய்தியை பார்க்கமுடிந்தது. 


இதே போல் ETV Bharat, சமயம் தமிழ் போன்ற ஊடகங்களிலும் கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் வர்த்தக வளாகம் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது குறித்து செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 

image.png


முடிவு: 

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், கோயம்புத்தூரில் 30 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடி செலவில் அமைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகளுக்கான விரிவான விவரக்குறிப்புகளுடன் டெண்டர்களை தமிழ்நாடு அரசு சமீபத்தில் கோரியுள்ளது என்பது உறுதியானது. எனவே இன்னும் இதற்கான பணிகளை தொடங்கவில்லை என்று தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க