YouTurn

தவெக பிரச்சாரப் பாடலைக் கேட்ட கெளதம் வாசுதேவ் மேனன் எனப் பரவும் போலியான வீடியோ!

தவெக பிரச்சாரப் பாடலைக் கேட்ட கெளதம் வாசுதேவ் மேனன் எனப் பரவும் போலியான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த பிப்ரவரி மாதம் “Spotify India” விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட வீடியோ இது. இதை எடிட் செய்து பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

GVM : பரவாயில்லை, அதை ஓட விடு



X Link | Archive Link

விரிவான விளக்கம்

திரைப்பட நடிகரும், இயக்குநருமான கெளதம் வாசுதேவ் மேனன், படப்படிப்பின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார பாடல்களில் ஒன்றான “உங்கள் விஜய்” பாடலை கேட்பது போன்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில், அவர் பாடலை ஓட விடு எனக் கூறுவது போன்றும் காட்சியமைக்கப்பட்டுள்ளது.



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது உண்மையாக நடைபெற்ற சம்பவம் அல்ல என்பதை அறிய முடிந்தது. 


கடந்த பிப்ரவரி மாதம் “Spotify India” விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட வீடியோ இது. உண்மையான வீடியோவில், "விண்ணைத் தாண்டி வருவாயா" என்ற திரைப்படத்தின் பாடலே இடம் பெற்றிருக்கும். 



இந்நிலையில், உண்மையான வீடியோவை எடிட் செய்து, தவெக கட்சித் தொடர்பான பாடலுடன் இணைத்து சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில்,  தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார பாடல்களில் ஒன்றான “உங்கள் விஜய்” பாடலை, திரைப்பட படபிடிப்பிற்கு இடையில் கெளதம் வாசுதேவ் மேனன் ஓடவிடு எனக் கூறுவதாகப் பரவும் வீடியோ உண்மையானது அல்ல, எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.