YouTurn

Google Pay "Voucher"-களை பணமாக மாற்றலாம் என்று பரவும் போலியான வீடியோ!

Google Pay "Voucher"-களை பணமாக மாற்றலாம் என்று பரவும் போலியான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

Google Pay "Voucher"-களை, நம் வங்கி கணக்கிற்கு பணமாக மாற்றிக்கொள்ளலாம் எனப் பரவும் செய்திகள் போலியானவை. இது ஒரு மோசடி செயல். Google Pay-ன் அதிகாரப்பூர்வ பக்கங்களில் இது குறித்து எந்த அறிவிப்பும், விதிமுறைகளும் குறிப்பிடப்படவில்லை.

பரவிய செய்தி

GPay Voucher விற்று பணம் Google Pay Voucher Sell Tamil | Gpay Voucher Convert to Cash

image.png

Youtube Link | Archived Link

விரிவான விளக்கம்

Google Pay "Voucher"-களை, நம் வங்கி கணக்கிற்கு பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 



உண்மை என்ன? 

முதலில் Google Pay செயலில் இப்படி ஒரு option இருக்கிறதா என்பது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது ”Google Pay for Business Program Additional Terms of Service” என்ற தலைப்பில் கூகுள் பேயின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்ததை தேடிப் பார்த்தோம். அதில் Voucher-களை வங்கி கணக்கிற்கு பணமாக மாற்றிக்கொள்வது குறித்து எங்கும் குறிப்பிடவில்லை. அதே போல், அந்த பக்கத்தில் ”GOOGLE PAY TERMS OF SERVICE FOR INDIA RESIDENTS” என்று இருந்ததையும் படித்துப் பார்த்தோம். அதிலும் இது குறித்தான எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. 

image.png


இதை வைத்து பரவி வரும் வீடியோவில் உள்ளது மோசடியான செயல் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. 


இதையடுத்து பரவி வரும் வீடியோவில் சொல்வதை போன்று செய்து பார்த்தோம். முதலில் கூகுள் பேயில் உள்ள vocher code-ஐ copy செய்தோம். பின்னர் Shorts tamil என்று கூகுள் தேடினோம். அதை கிளிக் செய்த பின்பு வந்த search box-ல் Gpay என்று டைப் செய்து தேடினோம். அப்போது வேறு ஏதோ செயலி தான் வந்தது. இதற்கும் கூகுள் பேக்கும் எந்த தொடர்பும் இல்லை. 


முடிவு: 

எனவே, Google Pay "Voucher"-களை, நம் வங்கி கணக்கிற்கு பணமாக மாற்றிக்கொள்ளலாம் எனப் பரவும் செய்திகள் போலியானவை. இது ஒரு மோசடி செயல். Google Pay-ன் அதிகாரப்பூர்வ பக்கங்களில் இது குறித்து எந்த அறிவிப்பும், விதிமுறைகளும் குறிப்பிடப்படவில்லை. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க