YouTurn

அதிமுக பாஜகவுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்று செம்மலை கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டு!

அதிமுக பாஜகவுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்று செம்மலை கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாக சமூக ஊடகங்களில் தந்தி டிவியின் பெயரில் பரவும் நியூஸ்கார்டு போலியானது. தந்திடிவி இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை.

பரவிய செய்தி

“எடப்பாடி பழனிசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும்" "அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது த*கொலைக்கு சமம்”, எனவே பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; இல்லையேல் அதிமுகவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்  - அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை.


X Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, மார்ச் 25 அன்று திடீர் பயணமாக டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் “எடப்பாடி பழனிசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம், எனவே பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; இல்லையேல் அதிமுகவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாகக் கூறி தந்தி டிவியின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 



Content not available.


Content not available.


உண்மை என்ன? 


பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது போலியான நியூஸ் கார்டு என்பதை அறிய முடிந்தது. 


அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, “எடப்பாடி பழனிசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம், எனவே பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறியிருப்பது குறித்து ஊடகங்களில் செய்திகள் ஏதாவது வெளியிடப்பட்டிருக்கிறதா என்பது குறித்து தேடியதில், இது குறித்து எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. 


மேலும் தந்தி டிவியின் சமூக ஊடகப் பக்கங்களிலும் இது குறித்து தேடினோம். பரவி வரும் நியூஸ்கார்டு குறித்து அவர்கள் எந்த செய்தியும் வெளியிடவில்லை. இதன் மூலம் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பது தெளிவாகிறது.



முடிவு: 


நம் தேடலில், அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் தந்தி டிவியின் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.