YouTurn

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்திருக்கிறதா? உண்மை என்ன?

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்திருக்கிறதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

NCRB தரவுகள் என்ற பெயரில் பொய்யான தரவுகளைக் கொண்டு திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்திருப்பதாக தவறான பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

2016-2020 வரையிலான அதிமுக ஆட்சியில் நடந்ததை விட 2021-2023  திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடந்திருக்கிறது. 



WhatsApp Forward

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் கடந்த 2011 முதல் 2021 வரையில் பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியிலிருந்தது. அதன் பின்னர் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சிக்கு வந்தது. தற்போது திமுகவின் ஆட்சிக்காலமும் நிறைவடையும் நிலையில் இருக்கிறது.


இந்நிலையில், 2016 முதல் 2020ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சியிலும், 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரையில் திமுக ஆட்சியிலும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தரவுகளை பதிவிட்டு, ‘அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்திருப்பதாக’ பரப்பப்படுகிறது. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த இந்த தரவுகள் தமிழ்நாடு காவல்துறை குற்ற மதிப்பாய்வு ஆவணங்களில் இருந்தும், NCRB ஆவணங்களில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



உண்மை என்ன?


இந்தியா முழுவதும் நிகழும் பல்வேறு குற்றங்கள் குறித்து மாநில வாரியான தரவுகளை ’தேசிய குற்றப் பதிவு பணியகம் (NCRB)’ ‘Crime in India’ என்ற ஆவணத்தில் ஆண்டுதோறும் வெளியிடும். 


தமிழ்நாட்டில் ஆண்டு வாரியாக நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தரவுகளை தேடியபோது, 2024 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் உள்துறை விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா பதிலளிக்கையில் கொடுத்த அதிகாரப்பூர்வமான தரவுகளைக் காணமுடிந்தது.



அதில் 2013 முதல் 2022 வரையில் ஒவ்வொரு ஆண்டும் NCRB வெளியிட்ட ‘Crime in India’ ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு மாநில வாரியாக பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்டிருப்பதை காண்கிறோம்.



அதன்படி, தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை, 2016ஆம் ஆண்டில் 4463ஆகவும், 2017ல்  5397ஆகவும், 2018-ல் 5822ஆகவும், 2019-ல் 5934ஆகவும், 2020-ல் 6630-ஆகவும் இருந்ததாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2021ஆம் ஆண்டில் 8501ஆகவும் 2022ஆம் ஆண்டில் 9207ஆகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், 2023ஆம் ஆண்டிற்கான தரவுகளை தேடியபோது  NCRB வெளியிட்டுள்ள  ‘Crime in India - 2023’ ஆவணத்தில், தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 8943 குற்றங்கள் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



ஆனால் சமூக வலைத்தளத்தில் 2016 முதல் 2021 வரையில் அதிமுக ஆட்சியில் இருந்த போது 3000-துக்கு அதிகமாக எந்த ஆண்டிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறவில்லை என்றும் திமுக ஆட்சிக்கு வந்ததும் குற்றங்கள் 9000-தை தாண்டி சென்றுவிட்டதாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இது அடிப்படையிலே அதிகாரப்பூர்வ தகவலுடன் எந்த வகையில் பொருந்தவில்லை என்பதைக் காண்கிறோம்.


இதிலிருந்து, NCRB தரவுகள் என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகள் பொய்யானவை என்பது நிரூபணமாகிறது.


முடிவு:


NCRB தரவுகள் என்ற பெயரில் பொய்யான தரவுகளை கொடுத்து, திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்திருப்பதாக தவறான கருத்தை சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க