YouTurn

'விபூதி பூசிய வள்ளுவருக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்' எனப் பரவும் போலியான புகைப்படம்!

'விபூதி பூசிய வள்ளுவருக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்' எனப் பரவும் போலியான புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து, முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தும் திருவள்ளுவரின் சிலையில் விபூதி இருப்பது போன்று தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

ஸ்டாலினின் சித்தாந்த தடுமாற்றம்.. விபூதி வள்ளுவர்..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 30-ம் தேதி விமானத்தில் புறப்பட்ட அவர் ஜெர்மனியைச் சென்றடைந்தார். 


ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு, இங்கிலாந்துக்கு சென்ற முதல்வர், அங்கும் முதலீட்டாளர்கள், தமிழ் மக்களை சந்தித்து பேசினார். இந்நிலையில் அவர் விபூதி பூசிய திருவள்ளுவருக்கு லண்டனில் மரியாதை செலுத்தியதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. புகைப்படத்தில் முதல்வர் ஸ்டாலின் பக்கத்தில் இருக்கும் திருவள்ளுவரின் நெற்றியில் விபூதி பூசப்பட்டிருப்பதை தெளிவாகக் காண முடிகிறது.


மேலும் இந்த புகைப்படத்தை அதிமுகவைச் சேர்ந்த எம்பியும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான ஐ. எஸ். இன்பதுரை உட்பட அதிமுகவினர் பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.



உண்மை என்ன?


பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், லண்டனில் அமைந்துள்ள SOAS பல்கலைகழகத்திற்கு வெளியே அமைந்துள்ள திருவள்ளுவரின் புகைப்படம் ‘Alamy’ இணையதளப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில் திருவள்ளுவரின் நெற்றியில் விபூதி வைத்ததற்கான அடையாளம் எதிவும் இல்லை. 



மேலும் பரவி வரும் புகைப்படம் குறித்து, முதல்வர் ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தேடிப் பார்த்ததில், அவருடைய பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த புகைப்படத்திலும் திருவள்ளுவரின் நெற்றியில் விபூதி இல்லை என்பதை தெளிவாகக் காண முடிந்தது.


#DravidianModel, inclusive progress & the power of youth to shape India’s future.

I then paid homage at the Thiruvalluvar statue & restored plaque, honouring Tamil… pic.twitter.com/YB2T6pDCeK

— M.K.Stalin (@mkstalin) September 6, 2025


இந்நிலையில் உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து, முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தும் திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் விபூதி இருப்பது போன்று பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். 



முடிவு: 


நம் தேடலில், லண்டன் சென்ற முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தும் திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் விபூதி இருப்பதாகப் பரவும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க