YouTurn

முதலவர் கருப்பு காயினை வைத்து கேரம் விளையாடியதாக பரப்பப்படும் போலிப் புகைப்படம்!

முதலவர் கருப்பு காயினை வைத்து கேரம் விளையாடியதாக பரப்பப்படும் போலிப் புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

முதல்வர் ஸ்டாலின் ஸ்டரைக்கரை (Striker Coin) வைத்து சரியாக விளையாடுவதை வீடியோவில் தெளிவாக காணமுடிகிறது.

பரவிய செய்தி

ஒரு லக்கணத்தில் ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் ஸ்டரைக்கரிலும் கேரம் ஆடலாம் black coin னிலும் ஆடலாம்...

அதுக்கு தானே தத்தி ன்னு சொல்லுறோம்…


image.png


Link / Archive Link


image.png


Archive Link

விரிவான விளக்கம்

மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்யும் விதமாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 25 ‘அன்புச் சோலை’ மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 10ஆம் தேதி திறந்து வைத்தார். திருச்சியின் பொன்மலைப்பட்டியில் ‘அன்புச் சோலை’ மையங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலின், அங்குள்ள முதியோர்களுடன் கேரம் விளையாடினார்.


இந்நிலையில், முதல்வர் கேரம் விளையாடும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ஸ்டரைக்கருக்கு பதிலாக கருப்பு காயினை (Black Coin) வைத்து ஸ்டாலின் தவறாக கேரம் விளையாடுவதாக அதிமுக மற்றும் தவெக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன?


இது குறித்து இணையத்தில் தேடியபோது,  ’News18 Tamil Nadu’ செய்தி ஊடகத்தின் யூடியூப் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் ‘அன்புச் சோலை’ மையங்கள் திறந்து வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் கேரம் விளையாடும் வீடியோவைக் காணமுடிந்தது. 



அதில், முதியவர்களுடன் கேரம் விளையாடும் முதல்வர் ஸ்டாலின் ஸ்டரைக்கரை (Striker Coin) வைத்து சரியாக விளையாடுவதை தெளிவாக காணமுடிகிறது. 



மேலும் தேடியதில்,  ‘Sun News Tamil’ செய்தி ஊடகத்தின் சமூக ஊடக பக்கத்திலும் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அதிலும், முதல்வர் ஸ்டாலின் ஸ்டரைக்கரை வைத்து சரியாக விளையாடுவதை காணமுடிகிறது.



இதிலிருந்து, கருப்பு காயினை (Black Coin) வைத்து முதல்வர் ஸ்டாலின் கேரம் விளையாடியதாக பரப்பப்படும் புகைப்படம் Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. 


முடிவு:


Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட படத்தைக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் கருப்பு காயினை (Black Coin) வைத்து கேரம் விளையாடுவதாக தவறாக பரப்பிவருகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.