YouTurn

திமுகவச் சேர்ந்த தமிழன் பிரச்சன்னா விபூதி பட்டை பூசியிருந்தாரா? உண்மை என்ன?

திமுகவச் சேர்ந்த தமிழன் பிரச்சன்னா விபூதி பட்டை பூசியிருந்தாரா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உண்மையான புகைப்படத்தை Edit செய்து தமிழன் பிரச்சன்னா விபூதி பட்டை பூசியிருப்பது போல் போலியான புகைப்படத்தை பரப்பைவருகிறார்கள்.

பரவிய செய்தி

இதை மட்டும் ராமசாமி நாயக்கர் பாத்தான்னா…

செருப்புக்கு காவல் காக்க திட்டமிட்டு தானடா ஶ்ரீரங்கத்தில் என்னை உக்கார வைச்சிங்கன்னு கேப்பான்…. 



Link / Archive Link


விரிவான விளக்கம்

திமுகவைச் சேர்ந்த தமிழன் பிரச்சன்னா என்பவர், நெற்றி முழுவதும் விபூதி பட்டை பூசியிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, இது தான் பெரியாரும் திமுகவும் பேசிய கடவுள் மறுப்பு பகுத்தறிவா என்று கேள்வி எழுப்பும் வகையில் பாஜக ஆதரவாளர்கள் பரப்பி வருகிறார்கள்.



உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடியபோது, தமிழன் பிரச்சன்னா-வின் ‘எக்ஸ்’ தளத்தில் இந்த புகைப்படத்தைக் காணமுடிந்தது. 



2021 ஏப்ரல் மாதம் அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்துள்ள அந்த புகைப்படத்தில் அவரது நெற்றியில் விபூதி பட்டை இல்லாமல் இருப்பதை பார்க்கிறோம். 



ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தமிழன் பிரச்சன்னா பதிவேற்றம் செய்துள்ள புகைப்படத்தை Edit செய்து அவர் விபூதி பட்டை பூசியிருப்பது போல் போலியான புகைப்படத்தை உருவாக்கி பரப்பிவருகிறார்கள்.


முடிவு:


Edit செய்து உருவாக்கப்பட்ட போலியான் புகைப்படத்தை கொண்டு, திமுகவில் இருக்கும் தமிழன் பிரச்சன்னா அதன் கொள்கைக்கு விரோதமாக விபூதி பட்டை பூசியிருப்பதாக தவறாக பரப்பி வருகிறார்கள்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க