யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலில் விழும் தவெக தலைவர் விஜய் எனப் பரவும் புகைப்படம் போலியானது. புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் விஜய் அல்ல. உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலில் விழுவதைப் பாருங்கள் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான சூத்திரத்தை
ஜெயலலிதா காலடியில் விஜய் தேடியபோது.... pic.twitter.com/0Q1yH3oazl
இந்த கோமாளி யார் என்று தெரிகிறதா வேற யாரும் இல்ல நம்ம ஆக்டர் விஜய் தான் 😁😁
சிங்கம் எப்படி கால கவூது பாத்தியா 👌@actorvijay @TVKVijayHQ pic.twitter.com/Lk49T4JjB8
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் விஜய் அல்ல என்பதை அறிய முடிந்தது.
‘Outlook India’ இணையதளப் பக்கத்தில், பரவி வரும் புகைப்படத்தின் உண்மையான புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் ஜெயலலிதாவின் காலில் விழுவது நடிகர் விஜய் அல்ல என்பது உறுதியானது.
இதே போன்று, ‘OneIndia Tamil’ ஊடகப் பக்கத்திலும் பரவி வரும் புகைப்படத்தின் உண்மையான புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து தவெக தலைவர் விஜய், ஜெயலிதாவின் காலில் விழுவது போல தவறாகப் பரப்பி வருகின்றனர்.

முடிவு:
நம் தேடலில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலில் விழும் தவெக தலைவர் விஜய் எனப் பரவும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது.