YouTurn

GenZ DMK சந்திப்பில் திமுக ஒரு தீயசக்தி என்று குறிப்பிட்டுருந்ததாக பரவும் போலியான புகைப்படம்!

GenZ DMK சந்திப்பில் திமுக ஒரு தீயசக்தி என்று குறிப்பிட்டுருந்ததாக பரவும் போலியான புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

திமுக சார்பில் Gen Z இளம் தலைமுறையின் சந்திப்பு ’GenZ DMK’ என்னும் பெயரில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் தங்கள் கருத்துகளைக் குறிப்பிட்டிருந்த பேப்பரில், "திமுக ஒரு தீயசக்தி" என்று எழுதப்பட்டிருந்ததாகக் கூறி புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.

பரவிய செய்தி

எவனோ நம்ம பையன் உள்ள புகுந்துருக்கான் 

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற  ’GenZ DMK’ என்னும்  சந்திப்பு கூட்டத்தில், 30-வயதுக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட GEN Z இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்டவர்கள் தங்கள் கருத்துகளைக் குறிப்பிட்டிருந்த பேப்பரில், "திமுக ஒரு தீயசக்தி" என்று எழுதப்பட்டிருந்ததாகக் கூறி புகைப்படம் ஒன்று தவெக சார்பில் பரப்பப்பட்டு வருகிறது.


உண்மை என்ன? 

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், #GenZDMKMeetup: எதிர்காலம் நம்பிக்கை அளிக்கிறது! எதிர்க்கட்சி என்றாலும் energy கூடுகிறது. இதுதான் திமுக!” என்று குறிப்பிட்டு,  கலந்துகொண்டவர்கள் தங்கள் கருத்துகளைக் குறிப்பிட்டிருந்த பேப்பரை பதிவிட்டுருந்ததை பார்க்கமுடிந்தது. 


அதை zoom செய்து பார்த்த போது, திமுக ஒரு தீயசக்தி ன்று எழுதப்பட்டிருந்ததாக பரவுவது போல் எங்கும் இடம்பெறவில்லை. இதிலிருந்து பரவுவது போலியான புகைப்படம் என்றும், உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து பரப்புவதும் தெரியவந்தது. 


முடிவு: 

எனவே,  ’GenZ DMK’ சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் தங்கள் கருத்துகளைக் குறிப்பிட்டிருந்த பேப்பரில், "திமுக ஒரு தீயசக்தி" என்று எழுதப்பட்டிருந்ததாகக் கூறி பரவி வருவது போலியான புகைப்படமாகும்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க