YouTurn

சுப. வீரபாண்டியனின் “தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்" புத்தகம் எனப் பரவும் போலி புகைப்படம்!

சுப. வீரபாண்டியனின் “தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்" புத்தகம் எனப் பரவும் போலி புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உண்மையான புகைப்படத்தில் “மொழியும் வாழ்வும் (மேடைப் பொழிவுகள்)” என்ற தலைப்பே புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து, புத்தகத்தின் மேல் தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்" என்று இருப்பது போல தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

சென்னை நந்தனம் புத்தகக் கண்காட்சியில் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிய ஒரே புத்தகம் 


X Link | Archive Link

விரிவான விளக்கம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 49-வது சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 08 முதல் ஜனவரி 21 வரை நடைபெற்றது. இந்நிலையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவரான சுப. வீரப்பாண்டியன்  எழுதிய புத்தகத்தின் பெயர் "தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்" என்று குறிப்பிடப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


மேலும் பரவி வரும் பதிவுகளில், “சென்னை நந்தனம் புத்தகக் கண்காட்சியில் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிய ஒரே புத்தகம்” என்று குறிப்பிட்டும் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “The Kevin Paul Show” என்ற எக்ஸ் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது. அதில், “புத்தகத்தின் தலைப்பு “மொழியும் வாழ்வும்” என்று குறிப்பிட்டு கடந்த ஜனவரி 10 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. 



“மொழியும் வாழ்வும் (மேடைப் பொழிவுகள்)” என்ற புத்தகம் குறித்து ஆய்வு செய்ததில், சுப வீரபாண்டியன் அவர்களால் எழுதப்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது என்பதை உறுதிபடுத்த முடிந்தது. 



உண்மையான புகைப்படத்தில் “மொழியும் வாழ்வும் (மேடைப் பொழிவுகள்)” என்ற தலைப்பே புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து, புத்தகத்தின் மேல் "தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்" என்று இருப்பது போல தவறாகப் பரப்பி வருகின்றனர். 



முடிவு: 


நம் தேடலில், சுப. வீரபாண்டியன் எழுதிய “தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்" புத்தகம் என்று பரவும் புகைப்படம் போலியானது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க