YouTurn

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என்று ‘புதிய தலைமுறை’ கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என்று ‘புதிய தலைமுறை’ கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

’தாங்கள் எந்த கருத்துக் கணிப்பையும் வெளியிடவில்லை என்றும் இவ்வாறு பரப்பப்படும் card போலியானது’ என்றும் ’புதிய தலைமுறை தெரிவித்துள்ளது.

பரவிய செய்தி

புதிய தலைமுறை சமீபத்தில் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்புகள்:

அதிமுக 43.9 சதவீத வாக்குகள் பெற்று 131 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுக 41.5 சதவீத வாக்குகள் பெற்று 102 தொகுதிகளில் வெற்றி பெறும்.



WhatsApp Forward

விரிவான விளக்கம்

ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனால் பல்வேறு ஊடகங்கள் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றன. இந்நிலையில், ’புதிய தலைமுறை’ ஊடகம் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியதாகவும், அதன்படி படி அதிமுக கூட்டணி 43.9 சதவீத வாக்குகளைப் பெற்று 131 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், திமுக கூட்டணி 41.5 சதவீத வாக்குகளைப் பெற்று 102 தொகுதிகளில் வெற்றி பெறும்’ என்றும் குறிப்பிடும் card ஒன்று WhatsApp-ல் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன?


‘புதிய தலைமுறை’ செய்தி நிறுவனம் சமீபத்தில் நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு குறித்து இணையத்தில் தேடினோம். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி ‘புதிய தலைமுறை’ கருத்துக் கணிப்பு நடத்தியதாக செய்தி ஏதும் கிடைக்கவில்லை. 


இதுபோன்று கருத்துக் கணிப்பு பற்றிய card ‘புதிய தலைமுறை’ சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கிறதா? என்றும் தேடினோம். அப்படி ஏதும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி செய்யமுடிகிறது.



இறுதியாக, ‘You Turn’ தரப்பில் ‘புதிய தலைமுறை’ நிறுவனத்தின் டிஜிட்டல் ஊடகப்பிரிவை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டோம். ’தாங்கள் எந்த கருத்துக் கணிப்பையும் வெளியிடவில்லை என்றும் இவ்வாறு பரப்பப்படும் card போலியானது’ என்றும் அவர்கள் தெரிவித்தார்கள். 


முடிவு:


2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சதவீத வாக்குகள் பெற்று அதிமுக வெற்றி பெறும் என்று ‘புதிய தலைமுறை’ கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளதாக போலி Card பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க