YouTurn

கருத்து பணிப்பில் 32 சதவீத வாக்குகள் பெற்றதா தவெக? உண்மை என்ன?

கருத்து பணிப்பில் 32 சதவீத வாக்குகள் பெற்றதா தவெக? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

’தினமலர் - சாணக்யா’ நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் போலியாக Edit செய்து தவெக அதிக சதவீத வாக்குகளை பெற்றதாக தவறாக பரப்புகிறார்கள்.

பரவிய செய்தி

சாணக்யா + தினமலர் கருத்துக்கணிப்பு:

தவெக 32%

திமுக 37%

அதிமுக 26%

நாதக 5%


image.png


Link / Archive Link 



விரிவான விளக்கம்

’தினமலர்’ மற்றும் ‘சாணக்யா’ ஊடகங்கள் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு சமீபத்தில் வெளியானது. அதில், திமுக கூட்டணி 37 சதவீத வாக்குகள் பெரும் என்றும், தவெக 32 சதவீத வாக்குகள் பெறும் என்றும், அதிமுக 26 சதவீத வாக்குகள் பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?


’தினமலர் - சாணக்யா’ நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு பற்றிய செய்திகளைத் தேடியபோது, ’சாணக்யா’ யூட்யூப் தளத்தில் இந்த கருத்து கணிப்பு பற்றி ரங்கராஜ் பாண்டே பேசிய வீடியோ ஒன்றைக் காணமுடிந்தது.



ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகியுள்ள அந்த வீடியோவில், தேர்தல் கருத்துக் கணிப்பின் முடிவுகள் பற்றிய வரைபடத்தை (chart) காணமுடிந்தது. அதில், அதிமுக கூட்டணி 40 சதவீத வாக்குகள் பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், திமுக கூட்டணி 37 சதவீத வாக்குகள் பெறும் என்றும், தவெக கட்சி 18 சதவீத வாக்குகள் பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



இதிலிருந்து, உண்மையான கருத்துக் கணிப்பில் இருக்கும் விவரங்களை மாற்றி போலியாக Edit செய்து, தவெக அதிமுக கூட்டணியை விட அதிக வாக்குகள் பெறும் என்று தவறாக பரப்பி வருகிறார்கள். 


முடிவு:


’தினமலர் - சாணக்யா’ நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் போலியாக Edit செய்து தவெக அதிக சதவீத வாக்குகள் பெறவிருப்பதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க