யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த News Card Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டதாகும்.
பரவிய செய்தி
முழு சங்கியாவே மாறிட்டானுங்க அதிமுக அடிமைகள்.

முழுமையாக சங்கியாக மாறிய ராஜேந்திர பாலாஜி...

விரிவான விளக்கம்
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருப்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். இதனைத் தொடர்ந்து, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி அன்வர் ராஜா அதிமுக - பாஜக கூட்டணி குறித்த தன் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 21ஆம் தேதி திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா.
இந்நிலையில், “அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து திமுகவிற்கு போனால் போகட்டும். இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுகவிற்கு தேவை இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாகவும் அது குறித்து News Card ஒன்றை ’புதிய தலைமுறை’ செய்தித் தொலைக்காட்சி வெளியிட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

முழுமையாக சங்கியாக மாறிய ராஜேந்திர பாலாஜி...🤧 pic.twitter.com/tUInqhViV0
உண்மை என்ன?
‘புதிய தலைமுறை’ செய்தித் தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடியதில் இதுபோன்ற News Card எதுவும் கிடைக்கவில்லை.
மேலும், ’இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை’ என்று ‘புதிய தலைமுறை’ செய்தி நிறுவனம் விளக்கமளித்து ஒரு Card வெளியிட்டிருப்பதைக் காணமுடிந்தது. இதிலிருந்து, பரப்பப்படுவது போலியாக Edit செய்து உருவாக்கப்பட்ட News Card என்பது தெரியவருகிறது.

மேலும், News Card-டன் ராஜேந்திர பாலாஜி 'அன்வர் ராஜா’ குறித்து பேசியதாக பரப்பப்படும் வீடியோ குறித்தும் தேடினோம். அந்த வீடியோவில் ‘PT Bytes’ என்று எழுதியிருப்பதைக் கொண்டு, அந்த யூடியூப் தளத்தில் ‘ராஜேந்திர பாலாஜி’ என்ற keywords கொண்டு தேடினோம்.

இவ்வாறு தேடியதில், ”ரஜினி மனதில் பட்டதை பேசுகிறார்” என்ற தலைப்பில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது. 2020 ஜனவரி மாதம் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் இருக்கும் ஒரு பகுதியை தான் இப்போது அன்வர் ராஜா குறித்து ராஜேந்திர பாலாஜி பேசியதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது என்பதைக் காண்கிறோம்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, பரப்பப்படும் News Card-ஐ ’புதிய தலைமுறை’ வெளியிடவில்லை என்பதும் ‘இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுகவிற்கு தேவை இல்லை’ என்று ராஜேந்திர பாலாஜி பேசியதாக சொல்லப்படுவது தவறான தகவல் என்பதும் தெரிய வருகிறது.
முடிவு:
பரப்பப்படும் ’News Card’ Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டதாகும். மேலும், 5 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர பாலாஜி பேசிய வீடியோவை தற்போது ‘இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுகவிற்கு தேவை இல்லை’ என்று அவர் பேசியதாக தவறாக பரப்புகிறார்கள்.