YouTurn

'நியூஸ்7 தமிழ்' கருத்துக்கணிப்பில் தென்மண்டலங்களில் அதிமுக கூட்டணி முன்னிலை எனப் பரவும் போலி செய்தி!

'நியூஸ்7 தமிழ்' கருத்துக்கணிப்பில் தென்மண்டலங்களில் அதிமுக கூட்டணி முன்னிலை எனப் பரவும் போலி செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது ‘நியூஸ் 7 தமிழ்’ ஊடகம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு அல்ல. 'Spick Media' மற்றும் 'இடம் வலம் குழுவினர்' நடத்திய கருத்துக்கணிப்பு.

பரவிய செய்தி

நியூஸ் 7  வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தென் மாவட்டத்தில் உள்ள 44 தொகுதிகளில் 24 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்; மீதம் உள்ள தொகுதிகளில் 7 இழுப்பறி; அதில் திமுக 13, தவெக 0, இவ்வளவு தான் டா உங்க ஒர்த்து!!!



X Link | Archive Link 

விரிவான விளக்கம்

"‘நியூஸ் 7 தமிழ்’ ஊடகம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தென் மாவட்டத்தில் உள்ள மொத்தமுள்ள 44 தொகுதிகளில், 24 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறியுள்ளனர்" எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


மேலும் பரவி வரும் அப்பதிவுகளில், “13 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும். மீதம் உள்ள தொகுதிகளில் 7 இழுபறி” என்றும் குறிப்பிட்டு பரப்பி வருகின்றனர். 




உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்ததில், பரவி வரும் வீடியோவின் முழுப் பகுதி “News7 Tamil PRIME” ஊடகப் பக்கத்தில் ஜனவரி 26 அன்று “தெற்கு மண்டலம் - மக்கள் கணிப்பு | MAKKAL KANIPPU | NEWS7 TAMIL” என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. 


இது ‘நியூஸ் 7 தமிழ்’  ஊடகம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு அல்ல. ‘Spick Media’ மற்றும் ‘இடம் வலம் குழுவினர்’ நடத்திய கருத்துக்கணிப்பு என்பதை வீடியோவை முழுமையாக ஆய்வு செய்ததில் உறுதிபடுத்த முடிந்தது. 



Spike Media”, தமிழ்நாடு தேர்தல் நிலவரம் குறித்து கடந்த ஆண்டும் இதே போன்று கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர். 



முடிவு: 


நம் தேடலில், ‘நியூஸ் 7 தமிழ்’  வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் "தென் மாவட்டத்தில் உள்ள 44 தொகுதிகளில் 24 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க