யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
"இது போன்ற சம்பவம் எதுவும் நிகழவே இல்லை" என்று பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாத்திமா பாபுவே 1989ம் ஆண்டில் இருந்து விளக்கம் அளித்து வருகிறார். இருப்பினும் பொய் செய்தியை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இளமையில் அப்போது தூர்தர்ஷனில் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளராக விளங்கிய பாத்திமா பாபுவை கடத்திச் சென்று முதல்வர் ஸ்டாலின் மிரட்டினார் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளராக விளங்கிய பாத்திமா பாபுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடத்திச் சென்று மிரட்டினார் என்று பல ஆண்டுகளுக்கு மேலாக இந்த செய்தி பரவி வருகிறது.
முதலில் இது குறித்து பாத்திமா பாபு விளக்கமளித்துள்ளாரா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது தினமணி ஊடகத்தில் ஏப்ரல் 26, 2018 அன்று, ”ஸ்டாலின், பாத்திமாபாபு தொடர்பாக பல்லாண்டுகளாகப் புகைந்து கொண்டிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!” என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.

அதில் பல்லாண்டுகளாக பரவிய வந்த வதந்திக்கு பாத்திமா பாபு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ”என் வாழ்வில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த சமயத்தில் ஒருமுறை நான் சித்திரப்பாவை எனும் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தேன். தூர்தர்ஷன் வழக்கப்படி சீரியல் முடியும் வரை எனக்கு செய்தி வாசிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அந்த இடைவெளியில் என்னைச் செய்தி வாசிப்பாளராகக் காண முடியாத காரணத்தால் இப்படி ஒரு வதந்தியை பரப்பியிருக்கிறார்கள்.” என்று அவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
எனவே, இளமையில் அப்போது தூர்தர்ஷனில் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளராக விளங்கிய பாத்திமா பாபுவை கடத்திச் சென்று முதல்வர் ஸ்டாலின் மிரட்டினார் எனக் கூறி பரவி வரும் செய்திகள் வதந்தியே. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று பாத்திமா பாபு 2018ஆம் ஆண்டே விளக்கமளித்துள்ளார்.
